குளிர்காலத்தில் முள்ளங்கி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் இருக்கா.. வாங்க பார்க்கலாம்..!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குளிர்காலத்தில் முள்ளங்கி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் இருக்கா.. வாங்க பார்க்கலாம்..!

குளிர்காலத்தில் முள்ளங்கி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் இருக்கா.. வாங்க பார்க்கலாம்..!

Nov 25, 2024 01:58 PM IST Karthikeyan S
Nov 25, 2024 01:58 PM , IST

குளிர்காலத்தில் அதிகமாக விளையும் காய்கறிகளில் முள்ளங்கியும் ஒன்று. முள்ளங்கி பல நிறங்களில் கிடைக்கிறது. பொதுவாக வெள்ளை நிறத்தில் முள்ளங்கி அதிகமாக விளைகிறது. குளிர்காலத்தில் முள்ளங்கி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

குளிர்காலம் இப்போதே தொடங்கிவிட்டது. கடும் குளிர் இல்லை என்றாலும், பனிப்பொழிவு நிலவுகிறது. குளிர்காலத்தில் அதிகமாக விளையும் காய்கறிகளாக முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பட்டாணி, முள்ளங்கி போன்றவை உள்ளன. இதில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பும் மகத்தானது. இருப்பினும், பலருக்கு முள்ளங்கி பிடிக்காது. ஆனால், முள்ளங்கியில் ஏராளமான நன்மைகள் உள்ளன.   

(1 / 7)

முள்ளங்கியில் இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. முள்ளங்கியில் உள்ள அந்தோசயனின் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். குறிப்பாக வெள்ளை முள்ளங்கி இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. 

(2 / 7)

உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது, செரிமானக் கோளாறுகளை சரி செய்வது, மலச்சிக்கலைத் தீர்ப்பது போன்ற பல்வேறு நன்மைகள் முள்ளங்கியில் இருக்கிறது. 

(3 / 7)

முள்ளங்கி வயிறு, குடல், வாய் மற்றும் சிறுநீரக புற்றுநோய்க்கு எதிராக எதிர்ப்பை உருவாக்க உதவுகிறது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் அல்லது குளுக்கோஸ் அதிகமாக உள்ளவர்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முள்ளங்கி உதவுகிறது.

(4 / 7)

முள்ளங்கி இரத்தத்தை சுத்திகரிக்கிறது, உடலில் இருந்து நச்சுக் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும், மஞ்சள் காமாலை சிகிச்சையில் முள்ளங்கி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் முள்ளங்கி இரத்தத்தில் உள்ள பிலிரூபினை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் உடலில் ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்கிறது. 

(5 / 7)

முள்ளங்கி உடல் எடையை கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது செரிமான செயல்முறைக்கு மிகவும் நல்லது. இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து அதிகமுள்ளதால் இது குடல் இயக்கத்தை ஊக்குவித்து, மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது மற்றும் அதிகப்படியான கொழுப்பை கரைக்க உதவுகிறது.

(6 / 7)

முள்ளங்கியில் கலோரிகள் குறைவாகவும், கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தும் உள்ளன. இவை அதிகப்படியான கொழுப்பை அகற்ற உதவும். இதில் பொட்டாசியம் சத்தும் இருப்பதால்  இது உடலில் சோடியம்-பொட்டாசியம் விகிதத்தை சமப்படுத்த உதவுகிறது. உயர் இரத்த அழுத்த பிரச்சினைகளுக்கு முள்ளங்கி மிகவும் நன்மை பயக்கும். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்