Sleep Benefits: பகலில் குட்டித் தூக்கம் போடுவது நல்லதா? கெட்டதா? - விபரம் இதோ!
- பகலில் தூங்குவது நல்லதா? கெட்டதா? என்பதில் பலரிடையே குழப்பம் உள்ளது.
- பகலில் தூங்குவது நல்லதா? கெட்டதா? என்பதில் பலரிடையே குழப்பம் உள்ளது.
(1 / 7)
பகலில் சாப்பிட்டபின் ஒரு குட்டித் தூக்கம் போடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
(2 / 7)
பெரும்பாலானவர்கள் பகலில் தூங்குவது உடலுக்கு நல்லதல்ல என்று நினைக்கிறார்கள். ஆனால், பகலில் 30 நிமிடம் தூங்குவது என்பது, மூளையின் செயல்பாடுகளுக்கும் மூளையின் செல்களுக்கும் நல்லது என்கின்றன ஆய்வு முடிவுகள்.
(3 / 7)
பகலில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே தூங்க வேண்டும். எல்லாவற்றையும் மறந்து அரை மணி நேரம் குட்டித் தூக்கம் போட்டால் உடலும், மூளையும் மீண்டும் சுறுசுறுப்பாகி விடுகின்றன. இந்த தூக்கம் மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
(4 / 7)
இரவில் மட்டுமே தூங்குபவர்களை விட பகலில் சிறிது நேரம் தூங்குபவர்களின் மூளை செயல்பாட்டுத்திறன் அதிகரித்து காணப்படுகிறதாம்.
(5 / 7)
பகல் தூக்கத்தால் உயர் ரத்த அழுத்தம் குறைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருதய நோய்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள உதவும்.
(6 / 7)
ஆய்வுகளின் படி, பகலில் குட்டித் தூக்கம் மட்டுமே பயன் தரும்.அதேநேரம், அதீத பகல் தூக்கம் உடலுக்கு நல்லதல்ல என்றும் பகல் தூக்கம் நீடித்துக்கொண்டே போனால், அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மற்ற கேலரிக்கள்