Cold War: நடிகர் விவேக்கை ஒதுக்கிவைத்தாரா கமல்ஹாசன்? - திரைக்குப் பின்னால் இருக்கும் பஞ்சாயத்து
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Cold War: நடிகர் விவேக்கை ஒதுக்கிவைத்தாரா கமல்ஹாசன்? - திரைக்குப் பின்னால் இருக்கும் பஞ்சாயத்து

Cold War: நடிகர் விவேக்கை ஒதுக்கிவைத்தாரா கமல்ஹாசன்? - திரைக்குப் பின்னால் இருக்கும் பஞ்சாயத்து

Sep 18, 2023 11:38 PM IST Marimuthu M
Sep 18, 2023 11:38 PM , IST

  • நடிகர் கமல்ஹாசனுக்கும் விவேக்குக்கும் இடையில் பனிப்போர் இருந்ததா என்பது குறித்து விளக்குகிறது, இக்கட்டுரை.

நடிகர் கமல்ஹாசனுக்கும் நடிகர் விவேக்குக்கும் ஒரே குரு, கே.பாலச்சந்தர் தான். இருவரும் ஒரே பட்டறையில் இருந்து வெளியில் வந்து சினிமாவில் முன்னேறியவர்கள். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ’மனதில் உறுதி வேண்டும்’ என்னும் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர், விவேக். அதேபோல், கே.பாலச்சந்தர் இயக்கத்தில் அரங்கேற்றம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர், கமல்ஹாசன். 

(1 / 4)

நடிகர் கமல்ஹாசனும் விவேக்கும் பல ஆண்டுகளாக திரைப்படத்தில் இணைந்து பணியாற்றவில்லை. இதற்கு முக்கியக்காரணம், நடிகர் கமல்ஹாசன் தனக்காக தனியான ஒரு காமெடி நடிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். அவர்களுக்கே வாய்ப்பளித்தார் எனக் கூறப்பட்டது. ஆனால், நடிகர் வடிவேலுவுக்குக்கூட தேவர் மகன் படத்தில் வாய்ப்பளித்த கமல் விவேக்குக்கு வாய்ப்பு அளிக்காததற்குக் காரணம், நடிகர் விவேக்கின் ஹீமர் சென்ஸ் கமலுக்குப் பிடிக்காததே காரணம் என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

(2 / 4)

இந்நிலையில் நடிகர் விவேக், தான் இறப்பதற்கு முன்பு கமல் குறித்து காட்டமாக விமர்சித்துள்ளார். அதில், பாலக்காட்டு மாதவன் என்னும் திரைப்படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காமல் போனதற்கு ஒரு சீனியர் நடிகரின் படம் தான் காரணம் என்றும்; அப்பட வெளியீட்டின்போது தாங்கள் எவ்வளவோ கெஞ்சி வேறு தேதி மாற்றச்சொன்னதாகவும், ஆனால், மாற்றாமல் சிறுபடமான தங்கள் படத்துடன் வெளியிட்டதாகவும், இதனால் தங்கள் படக்குழு மிகப்பெரிய நஷ்டத்தைத் தழுவியதாகவும், விவேக் வேதனைபடத் தெரிவித்துள்ளார். அந்த பெரிய நடிகர் கமல்ஹாசன், அந்த பெரிய நடிகரின் படம், பாபநாசம். இதன்மூலம் கமல்ஹாசனுக்கும் விவேக்குக்கும் பிரச்னை என்பது பட்டவர்த்தனமாக தெரிந்தது.

(3 / 4)

இந்நிலையில், நடிகர் விவேக், கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட் ஆனார். 2019ஆம் ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, 2020ஆம் ஆண்டு பிப்ரவரி வரை நடைபெற்றது, இடையில், இந்தியன் 2 படத்தில் கிரேன் விபத்தில் ஏற்பட்ட பலி, கொரோனா போன்ற பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு சிறிது காலம் தடைபட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, 17 ஏப்ரல், 2021ஆம் ஆண்டு விவேக் காலமானார். நடிகர் கமல்ஹாசனும் விவேக்கும் இணைந்து நடித்த, ஒரே படமே, அவரது இறுதிப்படமாக மாறிவிட்டது துயர்மிகு வலி! 

(4 / 4)

மற்ற கேலரிக்கள்