Most Successful IPL Captain: சிறந்த கேப்டன்கள் பட்டியலில் தோனியை முந்திய ஹர்திக் பாண்டியா
- Most Successful IPL Captain List: நடப்பு ஐபிஎல் தொடரின் 35ஆவது போட்டியில், மும்பை அணிக்கு எதிராக குஜராத் வெற்றி பெற்றதன் மூலம் வெற்றிகரமான கேப்டன்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா முதலிடம் பிடித்து அசத்தி உள்ளார்.
- Most Successful IPL Captain List: நடப்பு ஐபிஎல் தொடரின் 35ஆவது போட்டியில், மும்பை அணிக்கு எதிராக குஜராத் வெற்றி பெற்றதன் மூலம் வெற்றிகரமான கேப்டன்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா முதலிடம் பிடித்து அசத்தி உள்ளார்.
(1 / 7)
ஐபிஎல் தொடரில் அதிக வெற்றி சதவீதம் பெற்ற கேப்டன்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் குறைந்தது 20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த வீரர்களில் தோனி மற்றும் ரோகித் சர்மாவை முந்தியுள்ளார் குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா
(IPL twitter)(2 / 7)
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 75 சதவீத வெற்றி விகிதத்துடன் முதலிடத்தில் உள்ளார். ஹர்திக் தலைமையிலான குஜராத் அணி 21 போட்டிகளில் 15 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் கண்டுள்ளது.
(IPL/Twitter)(3 / 7)
217 போட்டிகளில் 128 போட்டிகளில் வெற்றியையும், 88 போட்டிகளில் தோல்வியும் பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி 58.99 சதவீத வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
(IPL/Twitter)(4 / 7)
அதிக ஐபிஎல் கோப்பைகளை வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, டாப்-5 இல் கூட இல்லை. 149 போட்டிகளில் 83 வெற்றி, 65 தோல்விகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளார்.
(IPL Twitter)(5 / 7)
இந்த பட்டியலில் 58.82% வெற்றிகளுடன் சச்சின் டெண்டுல்கர் 3வது இடத்தில் உள்ளார். ரோஹித் சர்மாவின் வெற்றி சதவீதம் 56.08 ஆகும்.
(IPL/Twitter)(6 / 7)
சச்சினுக்குப் பிறகு ஸ்டீவ் ஸ்மித், அனில் கும்ப்ளே, ரிஷப் பந்த், ஷேன் வார்னே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர், அவர்களுக்குப் பிறகு ரோஹித் சர்மா இடம் பெற்றுள்ளார்.
(IPL/Twitter)மற்ற கேலரிக்கள்