HBD Neymar: கால்பந்தின் பேரதிசயம்.. பிரேசிலின் எதிர்காலம் நெய்மரின் பிறந்தநாள் இன்று!
- Happy Birthday Neymar: கால்பந்து உலகின் ஜாம்பவனாக திகழும் நெய்மர் இன்று (பிப்.05) தனது 32-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த சிறப்பு நாளில் அவரை பற்றி விளக்குகிறது இந்த சிறிய புகைப்படத் தொகுப்பு.
- Happy Birthday Neymar: கால்பந்து உலகின் ஜாம்பவனாக திகழும் நெய்மர் இன்று (பிப்.05) தனது 32-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த சிறப்பு நாளில் அவரை பற்றி விளக்குகிறது இந்த சிறிய புகைப்படத் தொகுப்பு.
(1 / 6)
பிரேசிலின் நட்சத்திர ஆட்டக்காரராக திகழும் நெய்மர், தனது அபார திறமையினால் இளம் வயதிலேயே ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாக வலம் வருகிறார். (REUTERS)
(2 / 6)
பிரேசிலில் மலை வாழ் மக்கள் வாழக்கூடிய மோகி தாசு குருசெசு என்ற கிராமத்தில் பிப்ரவரி 05, 1992ஆம் ஆண்டு பிறந்தார் நெய்மர் டா சில்வா சான்டோசு ஜூனியர்.(AP)
(3 / 6)
மைதானங்கள், பள்ளிகள், கால்பந்து மைதானங்கள் என்று எதுவும் இல்லாத பகுதி அந்த இடத்தில் பிறந்து வளர்ந்து, தானாக கால்பந்து கற்று கொண்டவர் நெய்மர். இரண்டு மெழுகுவர்திகளை நட்டு வைத்து நடுவில் பந்தை அடித்து சிறு வயதில் வீட்டருகே பயிற்சி செய்து வந்துள்ளார். (AP)
(4 / 6)
நெய்மரின் ஆட்டத்தைப் பார்த்த பிரேசிலிய முன்னாள் வீரர் டுங்கா இவரை பிரேசிலிய கிளப்பில் சேர்த்து விடுகிறார். இவரது திறமையைப் பார்த்து 17 வது வயதில் ரியல் மாட்ரிட் கிளப்புக்கு அனுப்பி வைக்கிறார். அங்கு ஆரம்பித்த கனவு தான் நெய்மரை இன்று உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் கொண்டாட வைத்துள்ளது.(REUTERS)
(5 / 6)
பிரேசில் மற்றும் குரோஷியா அணிகளுக்கு இடையிலான FIFA உலகக் கோப்பை 2022 காலிறுதி ஆட்டத்தில் இரு கோல்கள் அடித்ததன் மூலம் பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் அடித்திருந்த மறைந்த ஜாம்பவான பீலேவின் சாதனையை முறியடித்துள்ளார் நெய்மர். 3 முறை உலகக் கோப்பையை வென்றிருந்த பீலே 92 ஆட்டங்களில் விளையாடி 77 கோல்கள் அடிந்திருந்தார். நெய்மர் 78 கோல்கள் அடித்து பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.(REUTERS)
(6 / 6)
நெய்மர் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் விலகி அல் ஹிலால் கால்பந்து அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 2025ம் ஆண்டு வரை அரேபியாவின் அல் ஹிலால் கால்பந்து அணிக்காக நெய்மர் விளையாடுவார் என்று சவுதி புரோ லீக் தெரிவித்திருக்கிறது. 2025ல் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலக கால்பந்து சம்மேளனமான FIFA நடத்தும் கால்பந்து போட்டியில் அல் ஹிலால் அணிக்காக நெய்மர் விளையாடுவார். (AFP)
மற்ற கேலரிக்கள்