தலைமுடி உதிர்வால் பிரச்னையா?நீளமான, அடர்த்தியான முடியை பெற உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தலைமுடி உதிர்வால் பிரச்னையா?நீளமான, அடர்த்தியான முடியை பெற உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள்

தலைமுடி உதிர்வால் பிரச்னையா?நீளமான, அடர்த்தியான முடியை பெற உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள்

Dec 26, 2024 05:56 PM IST Muthu Vinayagam Kosalairaman
Dec 26, 2024 05:56 PM , IST

  • வாழ்க்கை முறை மாற்றம், ஹார்மோன் சமநிலையின்மை போன்றவற்றின் காரணமாக தலைமுடி உதிர்வு வாழ்க்கை முறை மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக முடி உதிர்தல் ஏற்படுகிறது. இது மக்களை கவலை அடைய செய்யும் விஷயமாகவே உள்ளது

குறிப்பாக பெண்களுக்கு தலைமுடி அடர்த்தியாகவும், நீளமாகவும் இருந்தால், ​​அது அவர்களுக்கு மிகவும் அழகான தோற்றத்தை கொடுக்கும். தவறான உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை போன்ற காரணங்களால் தலைமுடி உதிர்தல் ஏற்படுகிறது

(1 / 7)

குறிப்பாக பெண்களுக்கு தலைமுடி அடர்த்தியாகவும், நீளமாகவும் இருந்தால், ​​அது அவர்களுக்கு மிகவும் அழகான தோற்றத்தை கொடுக்கும். தவறான உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை போன்ற காரணங்களால் தலைமுடி உதிர்தல் ஏற்படுகிறது(freepik)

தலை முடியை அடர்த்தியாகவும், நீளமாகவும் மாற்றுவதற்கு சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இதை பின்பற்றுவதன் மூலம் முடி உதிர்தல் மற்றும் தலை முடிவை உடைவதைத் தடுக்கவும் செய்யலாம் 

(2 / 7)

வெந்தய விதைகள்: உங்களுக்கு முடி உதிர்தல் பிரச்னை இருந்தால், வெந்தய விதைகளைப் பயன்படுத்துங்கள். இதற்கு வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். காலையில் அவற்றை அரைத்து பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்ட்டை உங்கள் தலைமுடியில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பின் தண்ணீரில் கழுவவும். இதை தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் பலன் தெரியும். வெந்தயத்தில் உள்ள சத்துக்கள் முடிக்கு ஊட்டமளிக்க வேலையை செய்கின்றன

(3 / 7)

முட்டைகளைப் பயன்படுத்தலாம்: உங்கள் தலைமுடியை அடர்த்தியாக மாற்ற, உங்கள் தலைமுடியில் முட்டைகளை பயன்படுத்த தொடங்குங்கள். இதில் உள்ள புரோட்டீன்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் முடி அமைப்பை வலுப்படுத்த உதவுகிறது. இதற்கு வாரம் இருமுறை முட்டையை 20 நிமிடம் தலைமுடியில் தடவ வேண்டும். சில நாட்களில் முடிவுகளில் அடர்த்தி ஏற்படுவதை கண்ணால் பார்க்க தொடங்குவீர்கள்

(4 / 7)

கற்றாழை ஜெல்: கற்றாழையைப் பயன்படுத்தி உங்கள் தலைமுடியை அடர்த்தியாகவும் மாற்றலாம். கற்றாழை ஜெல்லை விரல்களின் உதவியுடன் உச்சந்தலையில் தடவ வேண்டும். சுமார் 30 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவவும். வாரத்துக்கு இரண்டு முறை இதை செய்தால் நல்ல பலனை பெறலாம்

(5 / 7)

நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு: நீங்கள் நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சையை பேஸ்ட் வடிவில் தயார் செய்து உங்கள் தலைமுடியில் தடவலாம். இதில் வைட்டமின் சி போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்க உதவுகிறது. கூந்தல் உலரும் வரை சிறிது நேரம் பேஸ்ட்டை உங்கள் தலைமுடியில் தடவி, பின்னர் தண்ணீரில் கழுவவும்

(6 / 7)

தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை: உங்கள் தலைமுடியை அடர்த்தியாக்க தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலையை பயன்படுத்தலாம். இதற்கு தேங்காய் எண்ணெயில் சிறிது கறிவேப்பிலையை கலந்து சூடாக்கவும். கறிவேப்பிலை கருப்பாக மாறும் வரை சமைத்து, ஆறிய பின் அதனை உச்சந்தலையில் தடவவும். தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை எண்ணெய்யை வாரத்துக்கு 2 முதல் 3 முறை தடவினால் நல்ல பலனை பெறலாம்

(7 / 7)

மற்ற கேலரிக்கள்