Saindhavi: ‘ஆமா வெயிட் போட்டுட்டேன்தான்.. நம்ம சந்தோஷம் நம்ம கையிலதான் இருக்கு.. அத அவர்கிட்ட’ - சைந்தவி பளார் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Saindhavi: ‘ஆமா வெயிட் போட்டுட்டேன்தான்.. நம்ம சந்தோஷம் நம்ம கையிலதான் இருக்கு.. அத அவர்கிட்ட’ - சைந்தவி பளார் பேட்டி!

Saindhavi: ‘ஆமா வெயிட் போட்டுட்டேன்தான்.. நம்ம சந்தோஷம் நம்ம கையிலதான் இருக்கு.. அத அவர்கிட்ட’ - சைந்தவி பளார் பேட்டி!

Published May 17, 2024 12:30 PM IST Kalyani Pandiyan S
Published May 17, 2024 12:30 PM IST

saindhavi: பள்ளிப் பருவத்தில் நான் நாடகம், டான்ஸ் என எல்லாவிதமான கலை சார்ந்த போட்டிகளிலும் ஈடுபடுவேன். ஆனால் பாடகியாக மாறிய பின்னர், மேடைக்குச் செல்ல வேண்டும். - சைந்தவி பளார் பேட்டி!

Saindhavi: ‘ஆமா வெயிட் போட்டுட்டேன்தான்.. நம்ம சந்தோஷம் நம்ம கையிலதான் இருக்கு..’ - சைந்தவி பளார் பேட்டி!

(1 / 6)

Saindhavi: ‘ஆமா வெயிட் போட்டுட்டேன்தான்.. நம்ம சந்தோஷம் நம்ம கையிலதான் இருக்கு..’ - சைந்தவி பளார் பேட்டி!

பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷின் மனைவியும், பாடகியுமான சைந்தவி, வாவ் லைஃப் சேனலுக்கு அண்மையில் பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவர் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் எவ்வளவு முக்கியம் என்பது குறித்து பேசி இருந்தார். அவர் பேசும் போது, “ பள்ளிப் பருவத்தில் நான் நாடகம், டான்ஸ் என எல்லாவிதமான கலை சார்ந்த போட்டிகளிலும் ஈடுபடுவேன். ஆனால் பாடகியாக மாறிய பின்னர், மேடைக்குச் செல்ல வேண்டும். அமைதியாக பாட வேண்டும். அப்படியே திரும்பி வந்து விட வேண்டும் என்பது போன்றதொரு மாயச்சுவரை என்னை சுற்றி கட்டிக்கொண்டேன்.   

(2 / 6)

பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷின் மனைவியும், பாடகியுமான சைந்தவி, வாவ் லைஃப் சேனலுக்கு அண்மையில் பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவர் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் எவ்வளவு முக்கியம் என்பது குறித்து பேசி இருந்தார்.

 

அவர் பேசும் போது, “ பள்ளிப் பருவத்தில் நான் நாடகம், டான்ஸ் என எல்லாவிதமான கலை சார்ந்த போட்டிகளிலும் ஈடுபடுவேன். ஆனால் பாடகியாக மாறிய பின்னர், மேடைக்குச் செல்ல வேண்டும். அமைதியாக பாட வேண்டும். அப்படியே திரும்பி வந்து விட வேண்டும் என்பது போன்றதொரு மாயச்சுவரை என்னை சுற்றி கட்டிக்கொண்டேன். 

 

 

இன்றைய காலகட்டத்தில் நீங்கள் மேடை ஏறினால் வெறும் பாடகியாக மட்டும் இருந்துவிட முடியாது; அதையும் தாண்டி அங்கு நீங்கள் ஒரு பெர்ஃபாமராக ஜொலிக்க வேண்டும். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு நாமெல்லாம் பெர்ஃபாம்  செய்தால் மக்கள் ரசிப்பார்களா? அது அவர்களுக்கு பிடிக்குமா உள்ளிட்ட கேள்விகள் எனக்குள் இருந்தன. ஆனால் அவையெல்லாம் நமக்குத் தேவையில்லாதது என்பதை புரிந்து கொள்ள ஒரு வயது தேவைப்பட்டது. இப்போதுதான் என்னைச் சுற்றி நானே கட்டமைத்த அந்த மாய சுவரை கொஞ்சம் கொஞ்சமாக இடித்துக் கொண்டிருக்கிறேன்.   

(3 / 6)

இன்றைய காலகட்டத்தில் நீங்கள் மேடை ஏறினால் வெறும் பாடகியாக மட்டும் இருந்துவிட முடியாது; அதையும் தாண்டி அங்கு நீங்கள் ஒரு பெர்ஃபாமராக ஜொலிக்க வேண்டும். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு நாமெல்லாம் பெர்ஃபாம்  செய்தால் மக்கள் ரசிப்பார்களா? அது அவர்களுக்கு பிடிக்குமா உள்ளிட்ட கேள்விகள் எனக்குள் இருந்தன. 

ஆனால் அவையெல்லாம் நமக்குத் தேவையில்லாதது என்பதை புரிந்து கொள்ள ஒரு வயது தேவைப்பட்டது. இப்போதுதான் என்னைச் சுற்றி நானே கட்டமைத்த அந்த மாய சுவரை கொஞ்சம் கொஞ்சமாக இடித்துக் கொண்டிருக்கிறேன். 

 

 

குழந்தை பெற்ற பிறகு நான் வெயிட் போட்டு விட்டேன்; இதனையடுத்து கடுமையாக டயட் இருந்து, ஒர்க் அவுட் செய்து எடையை குறைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். கடந்த இரண்டு வருடங்களாக தான் அதற்கான ரிசல்ட்டை என்னால் பார்க்க முடிகிறது. இப்போது அதை பார்க்கும் பொழுது எனக்குள் ஒரு விதமான தன்னம்பிக்கை பிறக்கிறது.எப்போது நாம் பொருளாதார ரீதியாக, எமோஷனல் ரீதியாக ஒருவரை சார்ந்து இருக்கிறோமோ அப்போதே நமக்கான சுதந்திரம் பறிபோகி விட்டது என்று அர்த்தம். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை, எப்படி இன்னொருவர் முடிவு செய்ய முடியும்.   

(4 / 6)

குழந்தை பெற்ற பிறகு நான் வெயிட் போட்டு விட்டேன்; இதனையடுத்து கடுமையாக டயட் இருந்து, ஒர்க் அவுட் செய்து எடையை குறைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். கடந்த இரண்டு வருடங்களாக தான் அதற்கான ரிசல்ட்டை என்னால் பார்க்க முடிகிறது. இப்போது அதை பார்க்கும் பொழுது எனக்குள் ஒரு விதமான தன்னம்பிக்கை பிறக்கிறது.

எப்போது நாம் பொருளாதார ரீதியாக, எமோஷனல் ரீதியாக ஒருவரை சார்ந்து இருக்கிறோமோ அப்போதே நமக்கான சுதந்திரம் பறிபோகி விட்டது என்று அர்த்தம். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை, எப்படி இன்னொருவர் முடிவு செய்ய முடியும். 

 

 

ஆகையால் நம்முடைய மகிழ்ச்சியானது எப்போதும் நம் கையில் இருக்க வேண்டும். இன்னொருவர் வந்து நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யக்கூடாது. ஆகையால் நம்முடைய மகிழ்ச்சியானது நம் கையில் தான் இருக்கிறது. அதை நாம் என்றுமே விட்டுவிடக்கூடாது.  

(5 / 6)

ஆகையால் நம்முடைய மகிழ்ச்சியானது எப்போதும் நம் கையில் இருக்க வேண்டும். இன்னொருவர் வந்து நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யக்கூடாது. ஆகையால் நம்முடைய மகிழ்ச்சியானது நம் கையில் தான் இருக்கிறது. அதை நாம் என்றுமே விட்டுவிடக்கூடாது.

 

 

இந்த காலத்தில் பெண்கள் பொருளாதார ரீதியாக, சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. நான் முதன் முறையாக ஒரு கல்யாண கச்சேரியில் சில சினிமா பாடல்களை பாடினேன். அதற்காக எனக்கு கிட்டத்தட்ட 150 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது. அந்த ரூபாயை நான் கையில் வாங்கிய பிறகு, நான் அப்படியே கற்பனையில் மிதந்து விட்டேன். அந்த அளவுக்கு சந்தோஷமாக இருந்தேன். இது போன்ற விஷயங்களை  நமக்கு யாராவது வந்து கற்றுக் கொடுக்க மாட்டார்கள். நாமே பார்த்து கற்றுக் கொண்டால் தான் தெரியும். எங்களுடைய குழந்தையை நாங்கள் அப்படித்தான் வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறோம். அதாவது நம்மிடம் எல்லாமே இருக்கிறது என்ற எண்ணத்தை குழந்தைக்கு வரவிடாமல் வளர்க்க வேண்டும்” என்று பேசினார். 

(6 / 6)

இந்த காலத்தில் பெண்கள் பொருளாதார ரீதியாக, சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. நான் முதன் முறையாக ஒரு கல்யாண கச்சேரியில் சில சினிமா பாடல்களை பாடினேன். அதற்காக எனக்கு கிட்டத்தட்ட 150 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது. 

அந்த ரூபாயை நான் கையில் வாங்கிய பிறகு, நான் அப்படியே கற்பனையில் மிதந்து விட்டேன். அந்த அளவுக்கு சந்தோஷமாக இருந்தேன். 

இது போன்ற விஷயங்களை  நமக்கு யாராவது வந்து கற்றுக் கொடுக்க மாட்டார்கள். நாமே பார்த்து கற்றுக் கொண்டால் தான் தெரியும். 

எங்களுடைய குழந்தையை நாங்கள் அப்படித்தான் வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறோம். அதாவது நம்மிடம் எல்லாமே இருக்கிறது என்ற எண்ணத்தை குழந்தைக்கு வரவிடாமல் வளர்க்க வேண்டும்” என்று பேசினார். 

மற்ற கேலரிக்கள்