Guru Puthan Luck: திக்பலம் கொண்ட குரு - புதன் சேர்க்கை; சித்தி அன்பு; தானாக வரும் சரஸ்வதி யோகம்! - யாருக்கு வாய்க்கும்?
Guru Puthan Luck: குரு - புதன் இணைவு பெற்றவர்களுக்கு காலி மனையானது கண்டிப்பாக இருக்கும். நிலமாக, நிறைய சொத்துக்களை வாங்கி வைத்திருப்பார்கள். இவர்களிடத்தில் ஏதாவது ஒரு தேடுதல் இருந்து கொண்டே இருக்கும்.
(1 / 5)
Guru Puthan Luck: திக்பலம் கொண்ட குரு - புதன் சேர்க்கை; சித்தி அன்பு; தானாக வரும் சரஸ்வதி யோகம்! - யாருக்கு வாய்க்கும்?
(2 / 5)
Guru Puthan Luck: குருவும், புதனும் இணையும் போது என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை பிரபல ஜோதிடர் அவிநாசி ஜோதிலிங்கம் பேசி இருக்கிறார்.
சரஸ்வதி யோகம்
இது குறித்து அவர் பேசும் போது, “குருவும் சரி, புதனும் சரி இரண்டு பேருமே அறிவாளிகள் ஆவர். இதில் புதனுக்கு குரு கிடையாது. குரு - புதன் இணைவு என்பது, நாம்தான் இங்கு எல்லாமே... நமக்குத்தான் அனைத்தும் தெரியும் என்ற நினைப்பைக்கொடுத்து விடும். இந்த இணைவு என்பது படிப்பில் இரண்டுக்கும் மேற்பட்ட டிகிரிகளை கொடுக்கும். எனக்கு தெரிந்து இந்த இணைவு பெற்று, பிஹெச். டி வரை படித்தவர்களும் இருக்கிறார்கள்.
(3 / 5)
இந்த இணைவு பெற்றவர்கள் அறிவாளிகளாக இருப்பார்கள். நன்றாக படிப்பார்கள். இவர்களுக்கு காலி மனையானது கண்டிப்பாக இருக்கும். நிலமாக, நிறைய சொத்துக்களை வாங்கி வைத்திருப்பார்கள். இவர்களிடத்தில் ஏதாவது ஒரு தேடுதல் இருந்து கொண்டே இருக்கும். இந்த இணைவு என்பது சரஸ்வதி யோகத்தைக்கொடுக்கும்.
(4 / 5)
சகோதரி மீது அதிக பாசம் இருக்கும்
இளைய சகோதரி இருந்தால், அவர்கள் மீது இவர்களுக்கு அதிக பாசம் இருக்கும். சித்தி இருந்தால், அவர்களுக்கு இவர்களை மிகவும் பிடிக்கும். புதன் - குரு சேர்க்கையானது ஈகோ கிரகம் ஆகும். எந்த துறையாக இருந்தாலும், அதில் வல்லவராக இருக்கும் நபர்களை இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
(5 / 5)
இவர்கள் இருவருமே லக்னத்தில் திக் பலம் அடையக்கூடிய கிரகங்கள். கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்துவது இவர்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். தோல் பிரச்சினைகள் இருக்கும். தாய் - மாமன் உறவு கசப்பானதாக இருக்கும். எங்கெல்லாம் மஞ்சள் - பச்சை நிறங்கள் ஒன்றாக இருக்கிறதோ அங்கெல்லாம் குரு புதன் சேர்க்கை இருக்கும்.” என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்