குரு சுக்கிரன் பலன்கள்: பணமழை கஜலட்சுமி யோகம்.. குரு சுக்கிரன் கொட்டி தீர்க்கும் ராசிகள்..!
குரு சுக்கிரன் சேர்க்கை மூலம் உருவாக உள்ள கஜலட்சுமி யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஒரு சில ராசிகள் இதன் மூலம் பொற்காலத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 7)
நவகிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படக் கூடியவர் குரு பகவான். இவர் சக்தி வாய்ந்த கிரகங்களில் ஒருவராக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடமாற்றத்தை செய்யக்கூடியவர். இவருடைய ராசி மாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(2 / 7)
குருபகவான் தனது ராசி சுழற்சியை முடிப்பதற்கு சுமார் 12 ஆண்டுகள் ஆகும் எனக் கூறப்படுகிறது. தற்போது குருபகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார் வருகின்ற மே மாதம் மிதுன ராசியில் நுழைகின்றார்.
(3 / 7)
இந்நிலையில் குரு பகவான் மிதுன ராசியில் நுழைந்த பிறகு ஜூலை மாதத்தில் குரு மற்றும் சுக்கிரன் இருவரும் இணைகின்றனர். இந்த இரண்டு சுப கிரகங்கள் ஒன்று சேர்கின்ற காரணத்தினால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மிதுன ராசியில் கஜலட்சுமி யோகம் உருவாகின்றது.
(4 / 7)
குரு சுக்கிரன் சேர்க்கை மூலம் உருவாக உள்ள கஜலட்சுமி யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஒரு சில ராசிகள் இதன் மூலம் பொற்காலத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(5 / 7)
மிதுன ராசி: மிதுன ராசியில் உருவாகும் கஜலட்சுமி யோகம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த காலகட்டம் உங்களுக்கு அதிர்ஷ்ட அனுபவங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. சுக்கிரனின் செல்வாக்கு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. குருபகவானால் திருமண பாக்கியம் உண்டாகும் என கூறப்படுகிறது. பொருளாதார நிலையிலும் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(6 / 7)
கன்னி ராசி: குரு சுக்கிரன் கஜலட்சுமி யோகம் உங்களுக்கு பத்தாவது வீட்டில் உருவாக உள்ளது. இதனால் உங்களுடைய அனைத்து முயற்சிகளும் வெற்றியை தேடி தரும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. சக ஊழியர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
(7 / 7)
கும்ப ராசி: சுக்கிரன் மற்றும் குரு இணைந்து உங்களுக்கு கஜலட்சுமி யோகத்தை ஐந்தாவது வீட்டில் கொடுக்கின்றனர். உங்கள் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. பல ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. வருமானம் இரட்டிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று திரும்பினக் கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்