Guru Peyarchi Luck: சமசப்த நிலையில் குரு.. 18 ஆண்டுகளுக்கு பிறகு வந்திருக்கும் யோகம்.. பணமழையில் நனைய போகும் ராசி எது?
கால புருஷனின் எட்டாவது இடம் என்று சொல்லக்கூடிய விருச்சிகராசி உயிரையும் உடலையும் பிரித்தெடுக்கக்கூடிய இடமாகும்.
(1 / 6)
விருச்சிகராசிக்கு குரு பெயர்ச்சி பலன்கள் எப்படி அமையப்போகிறது என்பது குறித்து ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன் தன்னுடைய யூடியூப் சேனலில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பேசினார்.
அவர் பேசும் போது, “கால புருஷனின் எட்டாவது இடம் என்று சொல்லக்கூடிய விருச்சிகராசி உயிரையும் உடலையும் பிரித்தெடுக்கக்கூடிய இடமாகும். இந்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி குருபகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார்.
(2 / 6)
நான்காம் பாவத்தில், அர்த்தாஷ்டமத்தில் சனி பகவான் ஆட்சி பெற்று, மூலத்திரிகோண வீட்டில் இருக்கிறார். ஐந்தாம் பாவத்தில் ராகு, ஆறில் இருக்கக்கூடிய குரு பகவான் ஏழாம் பாவம் என்று சொல்லக்கூடிய ரிஷப ராசிக்கு மாற இருக்கிறார்.
(3 / 6)
உங்களது பதினொன்றாம் இடம் என்று சொல்லக்கூடிய கன்னி ராசியில் கேது பகவான் உட்கார்ந்து இருக்கிறார். குரு பகவான் இருக்கின்ற இடத்தை விட பார்க்கின்ற பார்வைக்கு பலம் அதிகம்.
ஆறாம் பாவத்தில் மறைந்திருந்த குரு பகவான், ஏழாம் வீட்டிற்குச் சென்று சம சப்தமாக உட்கார போகிறார். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியான கிரக நிலை வாய்ப்பானது உங்களுக்கு வந்திருக்கிறது.
தனக்காரனாக இருக்கக்கூடிய குரு பகவான் இரண்டாம் இடமான தனஸ்தானத்திற்கும், ஐந்தாம் இடம் என்று சொல்லக்கூடிய புத்திர ஸ்தானத்திற்கும் அதிபதியாக வருகிறார்
(4 / 6)
இரண்டுக்கும், ஐந்துக்கும் அதிபதியான குரு பகவான் உங்களது ராசியை சமசப்தமாக பார்க்கிறார். இப்படிப்பட்ட கிரக அமைப்பினால் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக இருந்த பணப்பிரச்சினை, பணம் முடக்கம் பணம் சம்பந்தமான அனைத்து விஷயங்களும் சரியாகும்.
(5 / 6)
நினைத்த ஆணையோ, நினைத்த பெண்ணையோ கரம் பிடிக்கக்கூடிய வாய்ப்பை குருபகவான் உருவாக்கிக் கொடுப்பார். பிரிந்து இருந்த கணவன் மனைவியை ஒன்று சேர்க்கும் வாய்ப்பை உருவாக்குவார்.
(6 / 6)
இந்த காலகட்டத்தில் குழந்தை இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களது மூத்த அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனை நீங்கள் பொறுமையாக கையாள வேண்டும். பௌர்ணமி தினமன்று சத்திய நாராயண சுவாமிக்கு பூஜை செய்து வழிபடுவது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும்” என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்