Guru peyarchi 2024: 6ம் இடத்தில் குரு.. வில்லங்கத்தில் இடப்பெயர்ச்சி.. தனுசு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru Peyarchi 2024: 6ம் இடத்தில் குரு.. வில்லங்கத்தில் இடப்பெயர்ச்சி.. தனுசு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!

Guru peyarchi 2024: 6ம் இடத்தில் குரு.. வில்லங்கத்தில் இடப்பெயர்ச்சி.. தனுசு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!

Published Mar 03, 2024 06:30 PM IST Kalyani Pandiyan S
Published Mar 03, 2024 06:30 PM IST

ஐந்தாம் இடத்தில் உள்ள குரு பகவான், ஆறாம் இடத்திற்கு மாறும் பொழுது, ஆதிபத்தியமான கடன், எதிரி, நோய் ஆகியவற்றில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். காரணம் என்னவென்றால் ராசி அதிபதியான அவர் ஆறாம் இடத்தில் மறையக்கூடாது.

பிரபல ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன் ஆஸ்ட்ரோவேல் யூடியூப் சேனலில், தனுசு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்களை அண்மையில் பகிர்ந்து இருந்தார். அதில் அவர் பேசும் போது, “குரு பெயர்ச்சியானது வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதி நடக்க இருக்கிறது. அன்றைய தினம் குரு பகவான் கிருத்திகை பாதம் ஒன்றிலிருந்து, இரண்டாம் பாதத்திற்கு செல்கிறார் இந்த நிலையில் இந்த குரு பெயர்ச்சியானது தனுசு ராசிக்கு எப்படியான பலன்களை தரும் என்பதை பார்க்கலாம்.   

(1 / 7)

பிரபல ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன் ஆஸ்ட்ரோவேல் யூடியூப் சேனலில், தனுசு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்களை அண்மையில் பகிர்ந்து இருந்தார். 

அதில் அவர் பேசும் போது, “குரு பெயர்ச்சியானது வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதி நடக்க இருக்கிறது. அன்றைய தினம் குரு பகவான் கிருத்திகை பாதம் ஒன்றிலிருந்து, இரண்டாம் பாதத்திற்கு செல்கிறார் இந்த நிலையில் இந்த குரு பெயர்ச்சியானது தனுசு ராசிக்கு எப்படியான பலன்களை தரும் என்பதை பார்க்கலாம். 

தனுசு ராசி பொருத்தவரை கடுமையான பணக்கஷ்டம் கணவன் மனைவி பிரிவு, நோய் நொடிகள் உள்ளிட்டவற்றால் கடந்த காலங்களில் மிகப்பெரிய சோதனைகளை சந்தித்து விட்டனர். ஆனால் இந்த குரு பெயர்ச்சியானது உங்களுக்கு நல்ல காலமாக அமைய இருக்கிறது.   

(2 / 7)

ஐந்தாம் இடத்தில் உள்ள குரு பகவான், ஆறாம் இடத்திற்கு மாறும் பொழுது, ஆதிபத்தியமான கடன், எதிரி, நோய் ஆகியவற்றில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். காரணம் என்னவென்றால் ராசி அதிபதியான அவர் ஆறாம் இடத்தில் மறையக்கூடாது.  அவர் அப்படி மறையும் பொழுது, உங்களுக்கு தேவையில்லாத கடன்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. உங்களுக்கு இந்த காலகட்டத்தில் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் நீங்கள் இந்த காலகட்டங்களில் ஹோட்டல் உணவுகளை சாப்பிடாமல், வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள். சரியான நேரத்தில் தூங்கி எழுந்து உங்களது எண்ணங்கள் சரியான திசையை நோக்கி செல்லும் வகையில் பார்த்துக் கொள்ளுங்கள்.   

(3 / 7)

ஐந்தாம் இடத்தில் உள்ள குரு பகவான், ஆறாம் இடத்திற்கு மாறும் பொழுது, ஆதிபத்தியமான கடன், எதிரி, நோய் ஆகியவற்றில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். காரணம் என்னவென்றால் ராசி அதிபதியான அவர் ஆறாம் இடத்தில் மறையக்கூடாது. 

அவர் அப்படி மறையும் பொழுது, உங்களுக்கு தேவையில்லாத கடன்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. உங்களுக்கு இந்த காலகட்டத்தில் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 

ஆகையால் நீங்கள் இந்த காலகட்டங்களில் ஹோட்டல் உணவுகளை சாப்பிடாமல், வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள். சரியான நேரத்தில் தூங்கி எழுந்து உங்களது எண்ணங்கள் சரியான திசையை நோக்கி செல்லும் வகையில் பார்த்துக் கொள்ளுங்கள். 

மூன்றாம் இடத்தில் இருக்கக்கூடிய சனி பகவான் மிகப்பெரிய ஒரு ப்ளஸ் பாயிண்டாக இருக்கிறார். குரு அவர் ஆறாம் இடத்தில் மறைந்தால் கூட, ரிஷப ராசியில் மறைகிறார். ரிஷபம் குரு பகவானுக்கு ஆகாத இடமாக இருக்கிறது. அவர் உங்களது கேதுவை ஐந்தாம் பார்வையாக பார்க்கப் போகிறார். அது மிகப்பெரிய பளஸ் பாய்ண்டாக அமையும்.  

(4 / 7)

மூன்றாம் இடத்தில் இருக்கக்கூடிய சனி பகவான் மிகப்பெரிய ஒரு ப்ளஸ் பாயிண்டாக இருக்கிறார். குரு அவர் ஆறாம் இடத்தில் மறைந்தால் கூட, ரிஷப ராசியில் மறைகிறார். 

ரிஷபம் குரு பகவானுக்கு ஆகாத இடமாக இருக்கிறது. அவர் உங்களது கேதுவை ஐந்தாம் பார்வையாக பார்க்கப் போகிறார். அது மிகப்பெரிய பளஸ் பாய்ண்டாக அமையும். 

அதே போல குரு ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியை பார்க்கிறார். அது மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டாக அமையும். அவர் ஒன்பதாம் பார்வையாக மகர ராசியை பார்க்கிறார். பொதுவாக குரு பகவான் இருக்கின்ற இடத்தை விட பார்க்கின்ற பார்வைக்கு சக்தி அதிகம்.   

(5 / 7)

ஆகையால் இந்த பார்வையானது உங்களுக்கு அலுவலகத்தில் முதலாளியின் அனுகூலத்தையோ, அல்லது சக ஊழியர்களின் அனுகூலத்தையோ பெற்று தரும். 

(6 / 7)

ஆகையால் இந்த பார்வையானது உங்களுக்கு அலுவலகத்தில் முதலாளியின் அனுகூலத்தையோ, அல்லது சக ஊழியர்களின் அனுகூலத்தையோ பெற்று தரும். 

அதே போல நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் தவித்து வரும் தம்பதிகளுக்கு இந்த காலகட்டத்தில் குழந்தை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகையால் மிகப்பெரிய அதிசயங்கள் நடப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன

(7 / 7)

அதே போல நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் தவித்து வரும் தம்பதிகளுக்கு இந்த காலகட்டத்தில் குழந்தை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகையால் மிகப்பெரிய அதிசயங்கள் நடப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன

மற்ற கேலரிக்கள்