தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Guru Peyarchi 2024: Guru Peyarchi Benefits For Kanni Rasi

Guru Peyarchi 2024: ’பணம் கொட்டும்; திருமணம் கிட்டும்!’ கன்னி ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!

Mar 06, 2024 04:36 PM IST Kathiravan V
Mar 06, 2024 04:36 PM , IST

  • குரு பகவான் ஆனவர் உங்கள் ராசியையும் மற்றும் 3ஆம் இடம், 9ஆம் இடத்தையும் பார்க்கிறார். இது மிகச்சிறந்த கால கட்டமாக இருக்கும்.

இந்த வருட குரு பெயர்ச்சி ஆனது 2024 மே மாதம் ஒன்றாம் தேதி பகல் 3.39 மணி அளவில் மேஷ ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 

(1 / 7)

கன்னி ராசியை பொறுத்தவரை 8ஆம் இடத்தில் இருந்து துன்பம் கொடுத்து வந்த குரு பகவான் 9ஆம் இடத்திற்கு செல்ல உள்ளார்.  9ஆம் இடம் என்பது சுப கிரகத்திற்கு வலிமை மிகுந்த வீடாக உள்ளதால் ராஜயோகம் தரும் நேரமாக இந்த குரு பெயர்ச்சி அமையும்.

(2 / 7)

குரு பகவான் ஆனவர் உங்கள் ராசியையும் மற்றும் 3ஆம் இடம், 9ஆம் இடத்தையும் பார்க்கிறார். இது மிகச்சிறந்த கால கட்டமாக இருக்கும். 

(3 / 7)

நீண்ட நெடிய போராட்டங்களுக்கு பலன் கிடைக்கும். புதிய வேலை கிடைப்பது, வெளிநாடுகளில் வேலை கிடைப்பது, வேலையில் உள்ள சிக்கல்கள் தீருதல், புதிய தொழில் தொடங்குதல், கூட்டுத்தொழில் தொடங்குவதல் ஆகியவற்றுக்கு அற்புதமான காலகட்டமாக இது உள்ளது. ஆனால் தொழில் தொடங்கும் முன் சொந்த ஜாதகத்தை ஆராய்வது அவசியம்.

(4 / 7)

குரு பகவான் சுப செலவுகளை உங்களுக்கு ஏற்படுத்துவார், கோயில்களை புனரமைப்பது உள்ளிட்ட ஆன்மீக செயல்களை முன்னின்று செய்வீர்கள். இதற்கு தேவையான பணவரவுகளையும் குரு பகவான் ஏற்படுத்துவார். தொழில் செய்து வரும் கன்னி ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலமாக அமையும். வீடு கட்டுதல், வாகனம் வாங்குதல் உள்ளிட்டவற்றை இந்த ஆண்டில் நீங்கள் செய்யலாம். 

(5 / 7)

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். வீட்டில் இருந்த சொத்து பிரச்னைகள் சுமூக முடிவை எட்டும். இளைய சகோதரர் வழியில் இருந்த பிரச்னைகள் தீரும்.

(6 / 7)

உடல்நலத்தை பொறுத்தவரை 6ஆம் இடத்தில் இருக்கும் சனி உடல்நல பாதிப்புகளை குறைக்கும் என்றாலும், நோய் எதிர்ப்பு சக்தியை குறிக்கும் 7ஆம் இடத்தில் உள்ள ராகு உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் உடல்நலனில் கவனம் செலுத்துவது முக்கியம். சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வது, சரியான நேரத்தில் தூங்குவதும் அவசியம். 

(7 / 7)

உடல்நலத்தை பொறுத்தவரை 6ஆம் இடத்தில் இருக்கும் சனி உடல்நல பாதிப்புகளை குறைக்கும் என்றாலும், நோய் எதிர்ப்பு சக்தியை குறிக்கும் 7ஆம் இடத்தில் உள்ள ராகு உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் உடல்நலனில் கவனம் செலுத்துவது முக்கியம். சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வது, சரியான நேரத்தில் தூங்குவதும் அவசியம். (Freepik)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்