குரு அஸ்தமனத்தால் தலை தெறிக்கப் போகிறது.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. சிதைவது உறுதி
- Guru Bhagavan: குருபகவான் தனுஷ் மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தேவர்களின் குருவாக விளங்கிவரும் குரு பகவான். மே ஒன்றாம் தேதியன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு நுழைந்தார்.
- Guru Bhagavan: குருபகவான் தனுஷ் மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தேவர்களின் குருவாக விளங்கிவரும் குரு பகவான். மே ஒன்றாம் தேதியன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு நுழைந்தார்.
(1 / 6)
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், புத்திசாலித்தனம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
குருபகவான் தனுஷ் மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தேவர்களின் குருவாக விளங்கிவரும் குரு பகவான். மே ஒன்றாம் தேதியன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு நுழைந்தார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
(3 / 6)
குரு பகவான் மே மூன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் அஸ்தமனமானார். இவருடைய அஸ்தமனம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
தனுசு ராசி: குருபகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் உங்களுக்கு சிக்கல்கள் அதிகரிக்க கூடும். சதி செய்வதற்கு ஆட்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பார்கள். பயணத்தின் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
(5 / 6)
துலாம் ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகி உள்ளார். எதனால் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடன் வேலை செய்பவர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். கடின உழைப்பு உங்களுக்கு பலன்களை பெற்று தராது. நிதி நிலைமையில் மோசமான சூழ்நிலைகள் உருவாகும் செலவு அதிகரிக்கக்கூடும்.
(6 / 6)
மீன ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் குருபகவான் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு சோம்பேறித்தனம் அதிகரிக்க கூடும். வேலை செய்யும் போது உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உயர் அலுவலர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களோடு பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு அதிக சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மற்ற கேலரிக்கள்