Guru chevvai Serkai: கணவன் - மனைவி நெருக்கத்தை அறுத்தெரியும் செவ்வாய் குரு இணைவு! - தப்பிக்க செல்ல வேண்டிய ஆலயம் இதுதான்
Guru chevvai Serkai: நல்ல சொத்து கண்டிப்பாக இருக்கும். இவர்களுக்கு சகோதர பாசம் அதிகமாக இருக்கும். ஆனால் அவர்களிடம் இருந்து இவர்களுக்கு பெரும்பாலும் காயங்களே வந்து சேரும். - செவ்வாய் குரு இணைவு; தப்பிக்க செல்ல வேண்டிய ஆலயம் இதுதான்
(1 / 5)
Guru chevvai Serkai: கணவன் - மனைவி நெருக்கத்தை அறுத்தெரியும் செவ்வாய் குரு இணைவு! - தப்பிக்க செல்ல வேண்டிய ஆலயம் இதுதான்
(2 / 5)
Guru Chevvai Luck: குரு, செவ்வாய் இணைவு என்ன மாதிரியான பலன்களை கொடுக்கும் என்பதை பிரபல ஜோதிடரான அவிநாசி ஜோதிலிங்கம், பக்தி இன்ஃபினிட்டி சேனலுக்கு பேசி இருக்கிறார்.
கெட்ட கொழுப்பு அதிகம் இருக்கும்
இது குறித்து அவர் பேசும் போது, “ குரு பகவான் காலச்சக்கரத்தில் ஒன்பதாம் இடத்தை குறிக்கும். செவ்வாய் பகவான் ஒன்றாம் இடத்தை குறிப்பவராக இருக்கிறார். குரு செவ்வாய் இணைந்து இருந்தால், அவருக்கு கட்டுமஸ்தான உடல் இருக்கும். வொர்க் அவுட், டயட் என இருந்து உடம்பை கட்டுமஸ்தாக பார்த்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார். செவ்வாய் என்பது இரத்ததை குறிக்கும். குரு கொழுப்பை குறிக்கும். அதாவது கெட்ட கொழுப்பு.. ஆகையால் இவர்களுக்கு கெட்ட கொழுப்பு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
(3 / 5)
ஆகையால், ஒரு கட்டத்திற்கு மேல் தொடர்ந்து மருத்துவபரிசோதனையை எடுத்துக்கொள்வது இவர்களுக்கு அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. இவர்களிடம் மிகவும் மதிப்பு மிகுந்த வீடு, மனை என ஏதாவது நல்ல சொத்து கண்டிப்பாக இருக்கும். இவர்களுக்கு சகோதர பாசம் அதிகமாக இருக்கும். ஆனால் அவர்களிடம் இருந்து இவர்களுக்கு பெரும்பாலும் காயங்களே வந்து சேரும்.
(4 / 5)
மனிதாபிமானம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மனிதாபிமானம் கொண்டவர்களாக இருப்பார்கள். வீட்டை கோயில் போல வைத்திருப்பார்கள். ஊர் பொதுகாரியம் என்றால் இவர்கள் முன்னால் வந்து நிற்பார்கள். இவர்களது குழந்தைகளும் நல்ல நிலையில் இருப்பார்கள். நேர்மையாக இருப்பார்கள். சமுதாயத்தில் ஒரு இடத்தை அடைய போராடிக்கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு தலை சிறந்த ஆலயம் என்றால், அது திருச்செந்தூர் முருகன் ஆலயம் தான்.
(5 / 5)
இவர்களுக்கு குழந்தை பிறந்த உடன், கணவன் மனைவி உறவு அப்படியே கட் ஆகி விடும். வேலைப்பளு காரணமாக அந்த விஷயம் நடக்கும்.
அங்கு இவர்கள், இரவு நடக்கிற ஏதாந்த தரிசனும், மறுநாள் காலையில் நடக்கும் விஸ்வரூப தரிசனும் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது, வாழ்க்கை செழிக்கும். இவர்கள் உணவுப் பிரியராக இருப்பார்கள். சுவை இல்லை என்றால் இவர்கள் சாப்பிடமாட்டார்கள். இவர்களிடம் இருக்கும் மைனஸ் என்னவென்றால், இவர்களுக்கு குழந்தை பிறந்த உடன், கணவன் மனைவி உறவு அப்படியே கட் ஆகி விடும். வேலைப்பளு காரணமாக அந்த விஷயம் நடக்கும்.” என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்