ஆண்களின் விறைப்புத் தன்மையை சரிசெய்ய உதவும் சின்ன வெங்காயம் மற்றும் அவற்றின் பிற பயன்கள்
- ஆண்களின் விறைப்புத் தன்மையை சரிசெய்ய உதவும் சின்ன வெங்காயம் மற்றும் அவற்றின் பிற பயன்கள் குறித்துப் பார்ப்போம்.
- ஆண்களின் விறைப்புத் தன்மையை சரிசெய்ய உதவும் சின்ன வெங்காயம் மற்றும் அவற்றின் பிற பயன்கள் குறித்துப் பார்ப்போம்.
(1 / 6)
சின்ன வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.சின்ன வெங்காயம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது.சின்ன வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட்டால் வாய்ப்புண் மற்றும் கண்வலி குணமாகும். காரணம் வெங்காயத்தில் அதிகளவு உள்ள ரிபோபிளவின் என்னும் வைட்டமின் பி காரணமாகத்தான்.
(2 / 6)
இதய ரத்த நாளங்களில் ரத்தம் உறைவதைத் தடுக்க சின்ன வெங்காயத்தை உணவில் எடுத்துக்கொள்வது நல்லது. சின்ன வெங்காயத்தை வெறுமென எடுத்து மெல்வதால் உயர் ரத்த அழுத்தம் குறையும்.
(3 / 6)
சின்ன வெங்காயத்தில் இருக்கும் ஃபிளவனாய்டுகள் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. சின்ன வெங்காயத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை உடலில் வலுப்படுத்துகின்றன.
(4 / 6)
சின்ன வெங்காயம் சாப்பிடுவது மூச்சுக்குழாயில் இலகுத்தன்மையை உண்டு செய்து ஆஸ்துமா நோயாளிகளுக்கு சுவாசிக்க காரணம் ஆகிறது.
(5 / 6)
சின்ன வெங்காயத்தில் இருக்கும் செலினியம் வைட்டமின் ஈ-யின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது கண்களில் உண்டாகும் பிரச்னை சரிசெய்ய உதவுகிறது.
(6 / 6)
ஆண்கள் விறைப்புத் தன்மை பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் வெங்காயத்தை அப்படியே சாப்பிடுவது நல்லது. ஏனெனில் பயோமிகுலூஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வெங்காயம் ஆண்களின் விறைப்புப் பிரச்னையை சரி செய்ய உதவுகிறது. இது ஆண்களில் டெஸ்டோஸ்டிரோனின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது என்றும் ஆய்வு கூறுகிறது.
மற்ற கேலரிக்கள்