Superstar Rajinikanth: ‘ஸ்கூலுக்கு போ மாட்றான் சார்;விட்றா வண்டிய.. பேரனுக்காக பள்ளி வந்த ரஜினி; ஆச்சரியத்தில் மாணவர்கள்
Superstar Rajinikanth: பேரன் பள்ளிக்கு செல்ல அடம் பிடித்த நிலையில், தானே காரில் கொண்டு பள்ளியில் சேர்த்து இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்!
(1 / 5)
ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான செளந்தர்யா ரஜினிகாந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில், “ என்னுடைய மகன் இன்றைக்கு பள்ளி செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்துக்கொண்டிருந்தான்.
(2 / 5)
இதனையடுத்து அவனது தாத்தாவான சூப்பர் ஹீரோ அவரை பள்ளிக்கு அழைத்துச் சென்றார். திரையிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி, நீங்கள் ஏற்கும் எல்லா கதாபாத்திரங்களிலும் பெஸ்ட்டாக இருக்கிறீர்கள் டார்லிங் அப்பா” என்று பதிவிட்டு இருக்கிறார். பள்ளியில் அவரை பார்த்த மாணவர்கள் ரஜினிகாந்தை பார்த்து ஆச்சரியத்தில் உறைந்தனர்
(3 / 5)
ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த். இவருக்கும் அஸ்வின் குமார் என்பவருக்கு முதலில் திருமணம் நடந்தது. ஆனால் இருவருக்கும் இடையே நடந்த கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து விட்டார்கள். இவர்களுக்கு வேத் கிரிஷ் என்ற மகன் இருக்கும் நிலையில், தற்போது வேத் செளந்தர்யாவிடம் வளர்ந்து வருகிறார்.
(4 / 5)
இதற்கிடையே, இவருக்கும் விசாகனுக்கு இரண்டாவதாக திருமணம் நடந்தது. இவர்களுக்கும் ஒரு குழந்தையும் இருக்கிறது.
மற்ற கேலரிக்கள்