"பாதியில விட்டுட்டு போனவங்கள.. கேன்சர்ல நான் துடிச்சப்ப.. இது உங்க வாழ்க்கை" - கெளதமி!
எனக்கு பிரச்சினைகளை பார்த்து பின் வாங்குவது பிடிக்காத ஒன்று. அதனால் எனக்கு வேறு வாய்ப்பே கிடையாது. வாழ்க்கையை எதிர்த்து போராடுவது மட்டும் தான் எனக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு. - கெளதமி
(2 / 7)
பிரபல நடிகையான கௌதமி தான் கேன்சரை எதிர்த்து போராடிய கதையை லிட்டில் டாக்ஸ் யூடியூப் சேனலுக்கு பேசியிருக்கிறார்பிடிக்காத ஒன்றுஇதுகுறித்து அவர் பேசும் பொழுது, "வாழ்க்கையில் நமக்கு பிரச்சினைகள் நேரும் பொழுது, நம் கையில் இரண்டு வாய்ப்புகள் இருக்கும். ஒன்று அந்த பிரச்சினைகளை எதிர்த்து போராடுவது; இன்னொன்று என்னால் முடியாது என்று கையை தூக்குவது.
(3 / 7)
எனக்கு பிரச்சினைகளை பார்த்து பின் வாங்குவது பிடிக்காத ஒன்று. அதனால் எனக்கு வேறு வாய்ப்பே கிடையாது. வாழ்க்கையை எதிர்த்து போராடுவது மட்டும் தான் எனக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு.கேன்சர் படுத்தியபாடு வாழ்க்கையில் நேரும் சவால்களை நீங்கள் பிரச்சினைகளாக பார்க்கலாம். ஆனால், என்னை பொருத்தவரை வாழ்தலே அப்போதுதான் நடக்கிறது என்று நினைக்கிறேன்.
(4 / 7)
இதுவரை நீங்கள் சந்திக்காத பிரச்சினை வந்தால், அந்தப் பிரச்சினையை சமாளிக்க முதலில் சூழ்நிலையை புரிந்து கொள்ளுங்கள்; உங்களை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள், அந்த பிரச்சினையை எதிர்த்து போராட என்னென்ன தேவை என்பதை கண்டுபிடிங்கள். ஒரு கட்டத்தில் எனக்கு கேன்சர் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தோன்றியது. உடனே, நான் மருத்துவரை சென்று சந்தித்து சோதனைகளை செய்தேன். அப்போது எனக்கு கேன்சர் இருப்பது உறுதியானது. கேன்சர் ஒரு ரியாலிட்டியான விஷயம். அப்போது என் மனதில் ஓடிக்கொண்டு இருந்த ஒரே விஷயம் அது என்னுடைய மகள். மகள் கொடுத்த பலம்நான் இல்லையென்றால் அவளுக்கு வேறு யாரும் இருக்கப்போவதில்லை என்பது எனக்கு நன்றாக தெரிந்தது. அதனாரணமாகவே நான் என்னை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.
(5 / 7)
கேன்சரை எதிர்த்து போராடினேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் என்னுடைய மகள் என்னிடம் பேசிய விஷயங்கள் இந்த வாழ்க்கை மிக மிக அரிதானது. நான் மிகவும் அரிதானவள் என்பதை புரிய வைத்தது. இந்த இடத்தில் நம்மை யார் ஏமாற்றி விட்டு சென்றார், யார் நம் உடனேயே இருந்தார் உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் தேவையில்லாத ஒன்று.
(6 / 7)
கண்ணுக்குள்ளே நிற்கிறதுகாலையில் நீங்கள் முதலில் கண்விழிக்க வேண்டும்; அதுதான் உங்களது முதல் குறிக்கோள். நீங்கள் காலையில் விழிக்கும் பொழுது ஆரோக்கியமாக விழித்தீர்கள் என்றால்,.உங்களுக்கு என்ன பிரச்சினை வந்தாலும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள். நீங்கள் உங்களுடைய எனர்ஜியை உங்களது பிரச்சினைகளை சமாளித்து வெளியே வர பயன்படுத்துங்கள். மாறாக அதை நீங்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதற்கும் கவலைப்படுவதற்கும் பயன்படுத்த வேண்டாம்.
(7 / 7)
என்னுடைய மகள் தான் எனக்கு எல்லாமுமாக இருந்தாள். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் நான் கிட்டத்தட்ட பல வருடங்களாக வேலை செய்யாமல் இருந்த போது திடீரென்று ஒரு நாள் என்னிடம் வந்து நீ வேலைக்குச் செல். நீ வேலையை மிகவும் மிஸ் செய்கிறாய் என்றாள். அதைக் கேட்டதும் எனக்கு ஷாக் ஆகிவிட்டது. உடனே நான் வேலைக்கு சென்று விட்டால், உன்னை யார் பத்திரமாக பார்த்துக் கொள்வார் என்று கேட்டேன். அதற்கு அவள் நீ என்னை நன்றாக வளர்த்திருக்கிறாய், நான் என்னைப் பார்த்துக் கொள்வேன் என்று கூறினாள். அவள் அப்படி பேசியது இன்னும் என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது." என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்