Good Bad Ugly Trailer: ‘ஒத்த ரூவாயும் தாரேன்.. ஒரு ஒனப்பத் தட்டும் தாரேன்..’ இது AK படமில்ல.. அஜித் படம்!
- Good Bad Ugly Trailer: துப்பாக்கியில் தெறிக்கும் தோட்டா போல, இளையராஜா பாடல், இளமையான அஜித், முதுமையான வசனம் என வேற லெவலில் இறங்கியிருக்கிறது குட் பேட் அக்லி டிரெய்லர். டீசருக்கு துளியும் குறையாத தீப்பொறியாக வெளியாகியிருக்கும் ‘AK’ யுனிவர்சல் பற்றி பார்க்கலாம்!
- Good Bad Ugly Trailer: துப்பாக்கியில் தெறிக்கும் தோட்டா போல, இளையராஜா பாடல், இளமையான அஜித், முதுமையான வசனம் என வேற லெவலில் இறங்கியிருக்கிறது குட் பேட் அக்லி டிரெய்லர். டீசருக்கு துளியும் குறையாத தீப்பொறியாக வெளியாகியிருக்கும் ‘AK’ யுனிவர்சல் பற்றி பார்க்கலாம்!
(1 / 6)
குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. இளையராஜா இசைத்த ‘ஒத்த ரூபாயும் தாரேன்..’ பாடலோடு தொடங்குகிறது டிரெய்லர்.
(2 / 6)
இதுவரை அஜித் படத்தில் இல்லாத அளவிற்கு, வேறு ஒரு படத்தின் பாடலோடு டிரெய்லரின் பெரும்பாலான காட்சிகள் வருகின்றன. உண்மையில் இது AK படமில்லை. பழைய அஜித் படம்.. அதாவது அல்டிமேட் ஸ்டார் அஜித் படம் மாதிரி, டிரெய்லர் இருக்கிறது
(3 / 6)
முன்பு அஜித் நடித்த அமர்க்களம், பில்லா, ரெட் போன்ற பல ஹிட் படங்களின் வசனங்கள், அடுக்கடுக்காக டிரெய்லரில் வருகிறது. வசனங்கள் மட்டுமல்ல.. அஜித்தின் கெட்டப்பும் கிட்டத்தட்ட அப்படி தான் வருகிறது.
(4 / 6)
‘என்ன ஏகே.. உன் வரலாறு எடுத்துப் பார்த்தேன்.. நீ பழைய வில்லனாமே..’ என்று படத்தின் வில்லன் கேட்பதும், அடுக்கடுக்காய் பழைய கெட்டப்புகளில் அஜித் வாக்கிங் வருவதும், டிரெய்லர் ட்ரீட்! ‘நடுரோட்ல எங்கப்பாவ கார்ல இருந்து தள்ளிவிட்டாரு’ என மங்கத்தாவை கனெக்ட் செய்கிறார் த்ரிஷா!
(5 / 6)
‘10 கிலோ கறி கொடுங்க பாய்..’ என வில்லன் தரப்பு டயலாக்கும், ‘இருங்க் பாய்..’ என அஜித் வசனம் முடிப்பதும், மீண்டும் வைரல் டயலாக், குட் பேட் அக்லியில் இடம்பிடித்துள்ளது. விடாமுயற்சியில் பாடலில் இடம் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.
(6 / 6)
‘அண்ணன் வர்றார் வழிவிடு..’ என்று விஜய்க்கு வைத்த டயலாக்கை.. ‘ஏகே வர்றார் வழிவிடு..’ என யோகிபாபு பேசுகிறார். ‘மூச்சு இருக்கும்.. முழி இருக்கும்.. உடம்புல உயிர் இருக்காது..’ என தீனா டயலாக்கை அஜித் கூறியதும், தோட்டாக்கள் பறக்கிறது. தோட்டா மட்டுமா… ரசிகர்களின் மனதும் தான். குட் பேட் அக்லி.. படத்தின் எதிர்பார்ப்பை அடிக்கு அடிக்கு.. உதைக்கு உதை உயர்த்துகிறது.
மற்ற கேலரிக்கள்