“தொட்டு தொட்டு பேசும் சுல்தானா” டிரெண்டிங் பியூட்டி பிரியா வாரியாரின் அசத்தல் போட்டோ கலெக்சன்!
- சமூக வலைத் தளங்களில் டிரெண்டிங்கில் இருக்கும் குட் பேட் அக்லி பிரியா வாரியார் அப்படத்தில் “தொட்டு தொட்டு பேசும் சுல்தானா” பாடலுக்கு அசத்தலாக நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவரது அசத்தலான இன்ஸ்டா போட்டோ கலெக்சன்களை இங்கு பாருங்கள்.
- சமூக வலைத் தளங்களில் டிரெண்டிங்கில் இருக்கும் குட் பேட் அக்லி பிரியா வாரியார் அப்படத்தில் “தொட்டு தொட்டு பேசும் சுல்தானா” பாடலுக்கு அசத்தலாக நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவரது அசத்தலான இன்ஸ்டா போட்டோ கலெக்சன்களை இங்கு பாருங்கள்.
(1 / 6)
மலையாள சினிமாவில் இருந்து வந்தவர் தான் பிரியா பிரகாஷ் வாரியர், இப்போது இவர் தான் தமிழ் ரசிகர்களின் சென்ஷேனல் டாபிக்காக இருந்து வருகிறார். இவர் குட் பேட் அக்லி படத்தில் ஆடிய நடனம் மூலம் தமிழ் ரசிகற்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். குட் பேட் அக்லி படம் பார்த்த அனைத்து ரசிகர்களும் பிரியா வாரியரை புகழாமல் இல்லை.
(2 / 6)
மலையாளத்தில் கலக்கி வந்த பிரியா, தமிழில் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். அப்படத்தில் அவருக்கு வலுவான கதாபாத்திரம் அமையவில்லை. ஆனால் அஜித்தின் குட் பேட் அக்லி இவருக்கு தமிழில் புது அடையாளத்தை கொடுத்துள்ளது.
(Instagram)(3 / 6)
தற்போது டிரெண்டிங் பியூட்டி ஆக இருக்கும் பிரியா இதற்கு முன்னதாக 2018 ஆம் ஆண்டே பிரபலமாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் இவர் அறிமுகமான முதல் படமான ஒரு அடார் லவ் படத்தில் வரும் சுடுவது போல இருக்கும் காட்சி சமூக வலைத் தளங்களில் டிரெண்டிங்கில் இருந்தது. இந்த நிலையில் மீண்டும் டிரெண்டிங் ஆகியுள்ளது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
(4 / 6)
முன்பு சிம்ரன் ஆடி இருந்த பாடலை மீண்டும் ரீகிரியேட் செய்யப்பட்டிருந்தாலும் பல ரசிகர்கள் சிம்ரன் தான் பெஸ்ட் எனவும் பதிவிட்டு வருகிறார்கள். இன்னும் சில ரசிகர்கள் பிரியாவையும் புகழ்ந்து வருகிறார்கள்.
(5 / 6)
தமிழில் அறிமுகமாகி இரண்டாவது படத்திலேயே அஜித் குமார், த்ரிஷா என பெரிய நட்சத்திரங்களோடு நடிக்கும் வாய்ப்பு பிரியாவிற்கு கிடைத்துள்ளது.
மற்ற கேலரிக்கள்