குறைந்தது தங்கம் விலை.. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.. ஜூன் 16, 2025 இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 16) சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

(1 / 6)
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கம் காணப்பட்டது.
(2 / 6)
குறிப்பாக, சென்னையில் கடந்த ஜூன் 11 முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. விடுமுறை தினமான நேற்று (ஜூன் 15) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.74,560க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழலில் இன்று (ஜூன் 16) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
(3 / 6)
இன்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 16) சவரனுக்கு ரூ.120க்கு குறைந்து ஒரு சவரன் ரூ.74,440-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து ரூ.9,305க்கு விற்பனை செய்யப்படுகிறது.
(4 / 6)
நேற்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 15) ஒரு சவரன் ரூ.74,560-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.9,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.
(5 / 6)
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலையில் இன்று (ஜூன் 16) எவ்வித மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ.120க்கும், 1 கிலோ கட்டி வெள்ளி ரூ.120,000-க்கும் விற்கப்படுகிறது.
(6 / 6)
தங்கம் விலை உயர்வு ஏன்? இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மற்ற கேலரிக்கள்