மீண்டும் புதிய உச்சம்.. வரலாறு படைத்த தங்கம் விலை.. ஷாக்கில் இல்லத்தரசிகள் - ஏப்ரல் 16 இன்றைய நிலவரம் இதோ!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மீண்டும் புதிய உச்சம்.. வரலாறு படைத்த தங்கம் விலை.. ஷாக்கில் இல்லத்தரசிகள் - ஏப்ரல் 16 இன்றைய நிலவரம் இதோ!

மீண்டும் புதிய உச்சம்.. வரலாறு படைத்த தங்கம் விலை.. ஷாக்கில் இல்லத்தரசிகள் - ஏப்ரல் 16 இன்றைய நிலவரம் இதோ!

Published Apr 16, 2025 10:27 AM IST Karthikeyan S
Published Apr 16, 2025 10:27 AM IST

  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 16) புதிய உச்சம் தொட்டுள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

CTA icon
உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
 சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினம்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நிலையில் பங்குச் சந்தைகளில் திடீர் சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக முதலீடு செய்யத் தொடங்கினர். இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக சரிவை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கத்தின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

(1 / 6)

சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கமாக இருந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.760 விலை உயர்ந்து மீண்டும் சவரன் ரூ.70,000-ஐ தாண்டியுள்ளது. சென்னையில்  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

(2 / 6)

இன்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 16) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.760 விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,520-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.95 அதிகரித்து ரூ.8,815-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(3 / 6)

நேற்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஏப்ரல் 15) ஒரு சவரன் ரூ.69,760-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.

(4 / 6)

இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலையில் இன்று (ஏப்ரல் 16) எவ்வித மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ.110க்கும், 1 கிலோ கட்டி வெள்ளி ரூ.110,000-க்கும் விற்கப்படுகிறது.

(5 / 6)

தங்கம் விலை உயர்வு ஏன்? இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. இதன் காரணமாகவும் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பது காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

(6 / 6)

Karthikeyan S

TwittereMail
சு.கார்த்திகேயன், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர். மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றவர். 2011 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். கல்வி வானொலி ஞானவாணி பண்பலை, ஈ நாடு டிஜிட்டல், ஒன் இந்தியா, டாப் தமிழ் நியூஸ், டைம்ஸ் நவ் நிறுவனங்களைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், அரசியல், அன்றாட நிகழ்வுகள், தமிழ்நாடு, தேசம், சர்வதேசம், ஆன்மிகம் மற்றும் யூடியூப் வீடியோ உள்ளிட்ட அனைத்து பிரிவுகளில் செய்திகளை வழங்கி வருகிறார்.

மற்ற கேலரிக்கள்