Ghee Benefits For Skin Care: சரும் பொலிவை அதிகரிக்கும் நெய்..! அழகான முகம் பெற நெய்யை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
- உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும் நெய் சருமத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. நெய் மூலம் சருமத்துக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
- உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும் நெய் சருமத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. நெய் மூலம் சருமத்துக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
(1 / 6)
சருமத்தை அழகாக பேனி காக்க காஸ்ட்லியான காஸ்மெடிக் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே அழகான தோற்றத்தை பெறலாம். அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய நெய் வைத்து அழகான தோற்றத்தை பெறும் விதமாக மேக்கப்பும் செய்யலாம். இதை பற்றி பலருக்கும் தெரியாது. சருமத்துக்கு ஈரப்பதத்தை தருவதில் நெய் பெரும் பங்கு வகிக்கிறது. சருமத்தில் உள்ள கறைகளை நீக்கி, பொலிவாகுவது எப்படி என்பதை பார்க்கலாம்
(2 / 6)
முகத்தை பொலிவாக்க நெய்யை பயன்படுத்தும் முயற்சிப்பவர்கள், நெய்யை நேரடியாக முகத்தில் தடவ வேண்டாம். நெய் அல்லது வெண்ணெய் நேரடியாக தடவினால் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காது. உங்கள் சருமத்தில் எண்ணெய் பிசுக்கோ அல்லது பொடுகு தொல்லை இருந்தாலோ பலன் கிடைக்காது. வறட்சியான சருமத்துக்கு நல்ல பலன் அளிக்கும். நெய்யில் இருக்கும் வைட்டமின் ஏ,டி, ஈ,கே போன்ற சத்துக்கள் சருமத்துக்கு நன்மை தரும். நெய்யை வைத்து பேஸ் பேக்குகளும் தயார் செய்யலாம்
(3 / 6)
உதடு வெடிப்புகளை குணப்படுத்துவதில் நெய் முக்கிய பங்கு வகிக்கிறது. உருக்கிய நெய் இரண்டு ஸ்பூன், இரண்டு தேங்காய் எண்ணெய் சேர்த்து அதை உதடுகளில் தேயக்கலாம். அதேபோல் உள்ளங்கை மற்றும் கை, கால்களில் இதர பாகங்களில் தேய்ப்பதன் மூலம் வெடிப்புகளை போக்கலாம்
(Freepik)(4 / 6)
ஒரு ஸ்பூன் நெய், 2 ஸ்பூன் கடலை மாவு, 2 ஸ்பூன் பால் ஆகியவற்றை சேர்த்து இந்த கலவையை, குளிப்பதற்கு முன் முகத்தில் தடவி 10 நிமிடம் வரை ஊற வைத்து கழுவ வேண்டும். இரண்டு வாரம் இதை தொடர்ச்சியாக செய்து வந்த சருமம் பளபளப்பாவதை கண்கூடாக காணலாம்
(Instagram )(5 / 6)
குளிப்பதற்கு முன்பு நெய் மற்றும் தேங்காய் சேர்ந்த கலவையை கண்களுக்கு அடிப்பகுதியில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து கழுவினால், கருவளையங்கள் நீங்கும். அதேபோல் கால் விரல்களை அழகுபடுத்த, நெய் மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை கலந்து அந்த கலவையை 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து கழுவ வேண்டும்
மற்ற கேலரிக்கள்