Gautham Menon: ‘சூர்யா அப்படி பண்ணுவார்னு நினைக்கவே இல்ல.. அப்படியே அப்செட்டாகி’ -கெளதம் மேனன் ஓப்பன் டாக்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Gautham Menon: ‘சூர்யா அப்படி பண்ணுவார்னு நினைக்கவே இல்ல.. அப்படியே அப்செட்டாகி’ -கெளதம் மேனன் ஓப்பன் டாக்

Gautham Menon: ‘சூர்யா அப்படி பண்ணுவார்னு நினைக்கவே இல்ல.. அப்படியே அப்செட்டாகி’ -கெளதம் மேனன் ஓப்பன் டாக்

Jan 19, 2025 06:00 AM IST Kalyani Pandiyan S
Jan 19, 2025 06:00 AM , IST

அவர்களால் நான் கேட்ட அந்த சமயத்தில் ஓகே சொல்ல முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. - கெளதம் மேனன் 

சூர்யாவுக்கும், தனக்கும் துருவநட்சத்திரம் படத்தில் நடந்த பிரச்சினைகள் குறித்து கெளதம் வாசுதேவ் மேனன் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.கரித்துக் கொண்டே இருக்கிறேனா?இது குறித்து அவர் பேசும் போது, ‘நான் என்னுடன் இணைந்த நடிகர்களுடன் மீண்டும் இணைவது குறித்து பேசும் பொழுது, என்ன இவன் எப்போதும் கரித்துக் கொண்டே இருக்கிறான் என்று நினைப்பார்கள்.  

(1 / 6)

சூர்யாவுக்கும், தனக்கும் துருவநட்சத்திரம் படத்தில் நடந்த பிரச்சினைகள் குறித்து கெளதம் வாசுதேவ் மேனன் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

கரித்துக் கொண்டே இருக்கிறேனா?

இது குறித்து அவர் பேசும் போது, ‘நான் என்னுடன் இணைந்த நடிகர்களுடன் மீண்டும் இணைவது குறித்து பேசும் பொழுது, என்ன இவன் எப்போதும் கரித்துக் கொண்டே இருக்கிறான் என்று நினைப்பார்கள்.

அவர்களால் நான் கேட்ட அந்த சமயத்தில் ஓகே சொல்ல முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை.  

(2 / 6)

அவர்களால் நான் கேட்ட அந்த சமயத்தில் ஓகே சொல்ல முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. 

துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கு சூர்யா நிச்சயமாக நோ சொல்லியிருக்கக் கூடாது என்பது என்னுடைய எண்ணம். ஏனென்றால், காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் எப்படி உருவாக்கப்பட்டதோ அதே பாணியில் தான் துருவநட்சத்திரம் படமும் உருவாக்கப்பட்டது. 

(3 / 6)

வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் தந்தை கதாபாத்திரத்திற்கு நானா படேகர் மற்றும் மோகன்லாலை நான் நடிக்க கேட்டிருந்தேன்; ஆனால், அவர்களால் நடிக்க முடியாமல் போனது. அந்த சமயத்தில் சூர்யா, தந்தை கதாபாத்திரத்தை தானே நடிக்கிறேன் என்று தைரியமாகச் சொன்னார்.

(4 / 6)

ஏன் சொல்ல முடியவில்லை?அப்படி சொன்ன சூர்யாவிற்கு துருவ நட்சத்திரம் படத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தப்படம் தொடர்பாக நிறைய டிஸ்கஷன் நடத்தப்பட்டது. அவர் படத்திற்கான ரெப்ஃபரன்ஸ் பாயிண்ட்களை கேட்டார். நான் அது பற்றி பேசாமல், நீங்கள் உள்ளே வந்தீர்கள் என்றால், நான் வேறு மாதிரியான ஒரு படத்தை எடுப்பேன் என்றும் ஆக்‌ஷனெல்லாம் வேறுமாதிரி செய்யலாம் என்றும் கூறினேன். ஆனால் அந்த படம் நடக்கவில்லை.  

(5 / 6)

ஏன் சொல்ல முடியவில்லை?

அப்படி சொன்ன சூர்யாவிற்கு துருவ நட்சத்திரம் படத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தப்படம் தொடர்பாக நிறைய டிஸ்கஷன் நடத்தப்பட்டது. அவர் படத்திற்கான ரெப்ஃபரன்ஸ் பாயிண்ட்களை கேட்டார். நான் அது பற்றி பேசாமல், நீங்கள் உள்ளே வந்தீர்கள் என்றால், நான் வேறு மாதிரியான ஒரு படத்தை எடுப்பேன் என்றும் ஆக்‌ஷனெல்லாம் வேறுமாதிரி செய்யலாம் என்றும் கூறினேன். ஆனால் அந்த படம் நடக்கவில்லை.

இதில் எனக்கு என்ன வருத்தம் என்றால், காக்க காக்க, வாரணம் ஆயிரம் என இரண்டு படங்களை அவருக்காக கொடுத்த ஒரு இயக்குநரை அவர் நம்பவில்லையே என்பதுதான். நான் அவரிடம் எனக்காக கூட செய்யுங்கள் என்று கேட்கவில்லை. அந்தப் படத்தை நான்தான் தயாரித்தேன்.எனக்குதான் இழப்புஅந்தப் படத்தை இயக்கப் போவது நான்தான். அந்த படத்தில் இழப்பு வந்தாலும் எனக்கு தான் வரப்போகிறது. அப்படி இருக்கும் பொழுது ஒரு ரிஸ்கை அவர் எடுத்து பார்க்க முன்வரவில்லை. ஒரு வேளை அந்தப்படம் தோல்வி அடைந்தால் எனக்குதான் பெரிய இழப்பு ஏற்பட்டு இருக்கும். இதில், அதனை வேறு யார் செய்திருந்தாலும் என்னால் அதை ஏற்றுக் கொண்டிருக்க முடியும். சூர்யா அதை செய்ததைதான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.’ என்று பேசினார்.

(6 / 6)

இதில் எனக்கு என்ன வருத்தம் என்றால், காக்க காக்க, வாரணம் ஆயிரம் என இரண்டு படங்களை அவருக்காக கொடுத்த ஒரு இயக்குநரை அவர் நம்பவில்லையே என்பதுதான். நான் அவரிடம் எனக்காக கூட செய்யுங்கள் என்று கேட்கவில்லை. அந்தப் படத்தை நான்தான் தயாரித்தேன்.

எனக்குதான் இழப்பு

அந்தப் படத்தை இயக்கப் போவது நான்தான். அந்த படத்தில் இழப்பு வந்தாலும் எனக்கு தான் வரப்போகிறது. அப்படி இருக்கும் பொழுது ஒரு ரிஸ்கை அவர் எடுத்து பார்க்க முன்வரவில்லை. ஒரு வேளை அந்தப்படம் தோல்வி அடைந்தால் எனக்குதான் பெரிய இழப்பு ஏற்பட்டு இருக்கும். இதில், அதனை வேறு யார் செய்திருந்தாலும் என்னால் அதை ஏற்றுக் கொண்டிருக்க முடியும். சூர்யா அதை செய்ததைதான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.’ என்று பேசினார்.

மற்ற கேலரிக்கள்