Gardening Tips : உங்கள் வீட்டு தோட்டத்தில் பறவைகளும், பட்டாம்பூச்சிகளும் வட்டமிட வேண்டுமா? இதோ ஐடியா?
- Gardening Tips : உங்கள் வீட்டு தோட்டத்தில் பறவைகளும், பட்டாம்பூச்சிகளும் வட்டமிட வேண்டுமா? இதோ ஐடியா?
- Gardening Tips : உங்கள் வீட்டு தோட்டத்தில் பறவைகளும், பட்டாம்பூச்சிகளும் வட்டமிட வேண்டுமா? இதோ ஐடியா?
(1 / 10)
இட்லிப்பூ - இட்லிப்பூச்செடி, ஐக்ஸ்னோரா என்று அழைக்கப்படுகிறது. இது அடர்நிறத்தில் கண்ணைக்கவரும் வகையில் மலர்ந்த மலர்களைக் கொண்டிருக்கும். இது பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளுக்கு மிகவும் பிடித்த பூக்கள் ஆகும். இவற்றில் விதைகளும், தேன் அமிழ்தும் நிறைய இருக்கும். இவை சிவப்பு, பிங்க், ஆரஞ்ச் ஆகிய வண்ணங்களில் இருக்கும். இந்தப் பூக்கள் பூத்திருப்பதே கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
(2 / 10)
காஸ்மோஸ் பூ - காஸ்மோஸ் என்ற பூக்கள் பல வண்ணங்களில் மலர்ந்து கண்களை கவர்வதாக இருக்கும். இதன் பூக்களும் பிங்க், வெள்ளை, ஆரஞ்ச் மற்றும் சிவப்பு வண்ணங்களில் இருக்கும். இதன் வண்ணமும் பிரகாசமாக இருக்கும். இதில் உள்ள தேனமுதை அருந்துவதற்காக பறவைகளும், பட்டாம்பூச்சிகளும் கவர்ந்திழுக்கப்படும். இது நன்றாக மலர்ந்து இருப்பதால் அது அவற்றிற்கு எளிதாக இருக்கும்.
(3 / 10)
சாமந்திப்பூ - சாமந்திப்பூ, இந்தியாவில் பரவலாக கிடைக்கும் பூவாகும். இது பூஜை மற்றும் மரணத்துக்கு பயன்படுத்தப்படும் பூவாகும். இந்த சாமந்திப்பூவும், பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளை கவர்ந்து இழுக்கும். இதுவும் பிரகாசமான மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும். இதிலும் தேன் தேனமுது அதிகம் இருக்கும்.
(4 / 10)
பிரிம்ரோஸ் - ப்ரிம்ரோஸ், மஞ்சள் நிறத்தில் உள்ள பூக்கள், இது மிருதுவான இதழ்களைக் கொண்டது. இதன் பிரகாசமான வண்ணம் மற்றும் இனிமையான மணம், பட்டாம்பூச்சிகள் மற்றும் பறவைகளை கர்ந்து இழுப்பதாக இருக்கும். நீல வண்ண பூக்களும் இருக்கும். இரண்டும் கலந்து இருந்தால் அழகாக இருக்கும்.
(5 / 10)
செவ்வந்தி - செவ்வந்தி பூக்கள், ச்ரைசந்தேமம் என்பது பல வண்ணங்களில் மலரும் பூக்கள் ஆகும். இது பல்வேறு வண்ணங்களில் பிரகாசமாகவும், அழகாகவும் காட்சியளிக்கும். செவ்வந்தி பூக்களும், பட்டாம்பூச்சிகள் மற்றும் பறவைகளை கவர்ந்திழுக்கும் தன்மைகொண்டவை. உங்கள் பால்கனி தோட்டத்தையும் பிரகாசமாக்கும்.
(6 / 10)
செம்பருத்தி - இது பூஜைக்கு வைக்கப்படும் மலர் மட்டுமல்ல, இது மருத்துவ குணம் நிறைந்த மலரும் ஆகும். இதை உங்கள் தோட்டத்தில் வைத்திருந்தால், இந்த மலர்களில் இருந்து தேநீர் தயாரித்து சாப்பிடுவது உங்கள் உடலுக்கு நல்லது. குறிப்பாக பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளை குணப்படுத்தும் தன்மை இந்த செம்பருத்தி பூக்கள் அல்லது அதன் மொட்டுக்களுக்கு உள்ளது. இதிலும் பல வண்ணங்கள் உள்ளன. பிங்க், சிவப்பு, வெள்ளை என செம்பருத்திகளும் பறவைகளையும், பட்டாம்பூச்சிகளையும் கவர்ந்து இழுப்பவை. இதிலும் விதைகளும், தேனமுதமும் அதிகம் இருக்கும்.
(7 / 10)
எருக்கம்பூக்கள் - எருக்கம் பூக்கள் உங்கள் வீட்டு தோட்டத்தில் இருக்கவேண்டியது அவசியம். எருக்கம் இலைகளில் இருந்து வரும் பாலை உங்கள் கைகளில் ஏதேனும் குத்தி, அது உள்ளே மாட்டிக்கொண்டால் அதற்கு வைத்து பலன்பெறலாம். ஆனால் அந்தப்பால் உங்கள் கண்களில் பட்டால் கண் பார்வை போய்விடும். எனவே கவனம் தேவை. இதிலும் கொத்துக்கொத்தாக வெளிர் வாடாமல்லி வண்ணத்தில் பூக்கள் பூக்கும். அவை மலர்ந்திக்கும்போது பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளை கவர்ந்திழுப்பதாக இருக்கும்.
(8 / 10)
பேப்பர் ரோஸ் எனப்படும் காகிதப்பூக்கள் - போகைன்வில்லா என்பது வீட்டுத்தோட்டத்தில் அடர்ந்த வளரக்கூடிய பூ வகை ஆகும். இதுவும் பிங்க், பர்பிள், வெள்ளை, சிவப்பு என பல வண்ணங்களில் மலரும். இதன் இதழ்களும் மென்மையானதாக இருக்கும். இதுவும் பறவைகளை கவர்ந்து இழுக்கும்.
(9 / 10)
சூரியகாந்திப்பூ - இது பெரிதாக மலர்ந்து விதைகள் வெளியில் தெரியும் வகையில் இருப்பதால், இது பறவைகளுக்கு விருந்தளிக்கக் கூடிய ஒரு வகை செடி என்றே கூறலாம். எங்கு இந்தச் செடிகளைப்பார்த்தாலும் பறவைகள் அங்கு குவிந்துவிடும். குருவிகளுக்கு இது சிறந்த உணவாகும். அமைதியான தோட்டத்தில் இந்த பூவைத் தேடிவரும் பறவைகள் எழுப்பும் ஒலி நன்றாக இருக்கும்.
மற்ற கேலரிக்கள்