Gardening Tips: வீட்டில் கொத்துக்கொத்தாக எலுமிச்சை காய்க்க என்ன செய்ய வேண்டும்? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க!
Gardening Tips: சில நேரங்களில் மரங்கள் எதிர்பார்த்த அளவுக்கு அதிக பழங்களை கொடுப்பதில்லை. ஒரு மரத்தில் எலுமிச்சைப் பழங்கள் நிறைந்திருக்க என்னென்ன செய்யலாம் என்ற குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.
(1 / 6)
நமக்கு திடீரென சோர்வாக இருந்தாலும் உடனே ஒரு எலுமிச்சை ஜூஸ் குடித்தால் சரியாகிவிடும் என பலரும் எண்ணுகிறார்கள். அத்துடன் எலுமிச்சையைக் கொண்டு பலவிதமான உணவுகளைத் தயாரிக்கிறோம். இதனால் பலர் வீட்டில் எலுமிச்சை மரங்களை வளர்க்க விரும்புகிறார்கள். சில நேரங்களில் மரங்கள் எதிர்பார்த்த அளவுக்கு அதிக பழங்களை கொடுப்பதில்லை.
(2 / 6)
ஒரு மரத்தில் எலுமிச்சைப் பழங்கள் நிறைந்திருக்க என்னென்ன செய்யலாம் என்ற குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.
(3 / 6)
தரையில் எலுமிச்சை மரங்களை நட்டால், அவற்றைச் சுற்றி சிறிது இடத்தை விட்டுவிட வேண்டும். ஏனெனில் வேர்கள் பரவும் என்று சொல்லப்படுகிறது. வேர்கள் நன்றாகப் பரவினால் மரம் நன்றாக வளரலாம்.
(4 / 6)
மரம் நன்றாக வளர இயற்கை உரங்களைப் பயன்படுத்தலாம். மாட்டு சாணம் மற்றும் பொட்டாசியம் கொண்ட இயற்கை உரங்களை பயன்படுத்தினால் மரம் வளர்வதில் தடை இருக்காது என சொல்லப்படுகிறது.
(5 / 6)
எலுமிச்சை மரங்கள் எவ்வளவு அதிகமாக சூரிய ஒளியைப் பெறுகிறதோ, அவ்வளவு சிறப்பாக வளரும். எனவே, சூரியன் நன்றாக படும் இடத்தில் நடவு செய்ய வேண்டும்.
மற்ற கேலரிக்கள்









