Kiran: வின்னர் படத்தில் ஆரம்பித்த கவர்ச்சி.. நியூ படத்தில் டபுள் மீனிங்.. கோவாவில் வைப் செய்யும் நடிகை கிரணின் கதை!
- வின்னர் படத்தில் ஆரம்பித்த கவர்ச்சி.. நியூ படத்தில் டபுள் மீனிங்.. கோவாவில் வைப் செய்யும் நடிகை கிரண்
- வின்னர் படத்தில் ஆரம்பித்த கவர்ச்சி.. நியூ படத்தில் டபுள் மீனிங்.. கோவாவில் வைப் செய்யும் நடிகை கிரண்
(1 / 6)
கோலிவுட் சினிமாவில் வட இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் நடிகைகளுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. ஏனெனில், அவர்களின் கோதுமை மாவு நிறம், தளதள உடம்பு தமிழ் ரசிகர்களை எப்போதுமே ஈர்க்கும். அப்படி, கவர்ச்சியுடன் கூடிய துறுதுறு நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக இருந்தவர் தான், நடிகை கிரண் ரத்தோர். அவருக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
(2 / 6)
ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்தவரான கிரண், பாலிவுட் நடிகை ரவீனா டண்டனின் உறவினர் ஆவார். எனவே, இவருக்கும் சினிமாவுக்கும் தொடர்பு என்பது ஹீரோயினாக ஆவதற்கு முன்பே இருந்து வந்தது. கல்லூரி முடித்து மாடலிங், பாப் ஆல்பம் செய்து கொண்டிருந்த கிரண் முதலில் இந்தி படத்தில் நடித்தார். இந்தி புதுமுக நடிகைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதில் முதன்மையாக இருக்கும் டோலிவுட், கிரணின் சேவையை நாட அங்கிருந்து தமிழுக்கு அழைத்து வந்தார் இயக்குநர் சரண்.
(3 / 6)
2002ஆம் ஆண்டு, கோடை விடுமுறையில் வெளியாகி, ஆண்டின் சூப்பர் ஹிட் படமாக அமைந்த ஜெமினி படத்தில் நடிகர் விக்ரமின் ஜோடியாக தமிழில் அறிமுகமானார், கிரண். இதனை அடுத்து உச்ச நடிகர் அஜித்துக்கு ஜோடியாக வில்லன், கமலுக்கு ஜோடியாக அன்பே சிவம் ஆகியப் படங்களில் கமிட்டாகி கவர்ச்சியுடன், சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தினார், கிரண்.
(4 / 6)
இடையே இந்தி, மலையாளம் மொழி படங்களிலும் நடித்தார். தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து சரத்குமார், அர்ஜுன் ஜோடியாக நடித்து கலக்கினார். கல்ட் கிளாசிக்காக அமைந்த ’அன்பே சிவம்’ படத்துக்கு பிறகு மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் வின்னர் படத்தில் நடித்தார். இந்த படத்தில் பிராசாந்துக்கு ஜோடியாக கவர்ச்சியில் தாராளம் காட்டி, இளசுகளை தன்வசம் ஈர்த்தார்.
(5 / 6)
குறிப்பாக படத்தில் இடம்பெறும் எந்த உயிர் தோழி என்ற பாடலில் கவர்ச்சியின் உச்சத்துக்கு பார்ப்பவர்களை குளிர்ச்சியாக்கியிருப்பார். விஜயகாந்துக்கு ஜோடியாக தென்னவன் என்ற படத்திலும், சில படங்களில் குத்தாட்டமும் போட்டார்.அப்படியே விஜய்யின் கமர்ஷியல் ஹிட்டான திருமலை படத்தில் வாடியம்மா ஜக்கம்மா பாடலில் தனிப்பாடலுக்கு நடனமாடி வைப் ஏத்தினார். எஸ்ஜே சூர்யாவின் நியூ படத்தில் மாமி கதாபாத்திரத்தில் சிறிய கேரக்டரில் தோன்றிய கிரண் டபுள் மீனிங் வசனம், கவர்ச்சி என இளைஞர்களுக்கு தாராள விருந்து படைத்திருப்பார். மார்கண்டேயா நீ வருவாயா என்று அந்த படத்தில் இடம்பெறும் பாடலில் பல ஷாட்கள் சென்சாரின் கத்தரிகளுக்கு இரையாகும் விதமாக கவர்ச்சி ஆட்டம்போட்டிருப்பார்.
(6 / 6)
இந்த படத்துக்கு பின்னர் கவர்ச்சி நடிகையாக உருவெடுத்த கிரண், தமிழில் கதாநாயகி அந்தஸ்தில் இருந்து குறைந்து, மாறாக கவர்ச்சி நடிகையாக பல படங்களில் நடித்தார்.கடைசியாக 2016ஆம் ஆண்டு முத்தின கத்திரிக்கா, இளமை ஊஞ்சல் ஆகியப் படங்களில் நடித்த கிரண் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கோவாவில் செட்டில் ஆகிவிட்டார். தமிழ் சினிமா டாப் ஹீரோக்களுக்கு திருப்புமுனை ஏற்படுத்திய படங்களில் நடித்த அதிர்ஷ்டம் மிக்க நாயகியாக திகழ்ந்து வந்த கிரணுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
மற்ற கேலரிக்கள்