Food Adulteration: ஆபத்தை விளைவிக்கும் பொருள்கள் கலப்படம்..! 111 மசாலா நிறுவனங்களின் லைசென்ஸ்கள் ரத்து
- இந்தியாவில் தயார் செய்யப்படும் மசாலா பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்த உணவு FSSAI எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் 111 நிறுவனங்களின் லைசென்ஸ்களை ரத்து செய்துள்ளது
- இந்தியாவில் தயார் செய்யப்படும் மசாலா பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்த உணவு FSSAI எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் 111 நிறுவனங்களின் லைசென்ஸ்களை ரத்து செய்துள்ளது
(1 / 5)
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்திய மசாலா பொருள்களான எம்டிஎச், எவரெஸ்ட் நிறுவனங்களின் பொருள்களுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிறுவனங்களின் பொருள்களில் எத்திலின் ஆக்ஸைடு இருப்பதாக கூறப்பட்டது. இதை அளவுக்கு அதிகமாக உள்கொண்டால் மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது என தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமும் மசாலா பொருள்களின் பாதுகாப்புதன்மை குறித்த ஆய்வில் இறங்கியது
(AFP)(2 / 5)
பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த ஏராளமான மசாலா பொருள்களை ஆய்வு செய்த பின்னர் தற்போது 111 நிறுவனங்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அந்த நிறுவனத்தினர் இனி மசாலா பொருள்கள் தயாரிப்பதை நிறுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. மசாலா பொருள்களின் பாதுகாப்பு சரிபார்ப்பு செயல்முறை இன்னும் நடைபெற்று வருகிறது எனவும் மேலும் இதுதொடர்பாக பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது
(Bloomberg)(3 / 5)
நாடு முழுவதும் சுமார் 4 ஆயிரம் சாம்பிள்கள் பெறப்பட்டுள்ளது. இந்த சாம்பிள்கள் அனைத்தும் பிரபலமான மசாலா நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டு தர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
(4 / 5)
வெளிநாடுகளில் இந்திய மசாலா பொருள்களுக்கு தனியொரு மதிப்பு இருந்து வருகிறது. கடந்த 2022-23 நிதியாண்டில் மட்டும் மசாலா பொருள்கள் ஏற்றுமதி மூலம் ரூ. 32 ஆயிரம் கோடி ஈட்டப்பட்டுள்ளது
மற்ற கேலரிக்கள்