உச்சி முதல் பாதம் வரை! கற்றாழையின் அற்புத பயன்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  உச்சி முதல் பாதம் வரை! கற்றாழையின் அற்புத பயன்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!

உச்சி முதல் பாதம் வரை! கற்றாழையின் அற்புத பயன்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!

Nov 26, 2024 10:51 AM IST Suguna Devi P
Nov 26, 2024 10:51 AM , IST

  • நமது வீடுகளின் வெளியிலும், தோட்டங்களிலும் முளைத்து இருக்கும் கற்றாழை பல நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. தலை முடி முதல் தொடங்கி உடலின் அனைத்து பாகங்களுக்கும் கற்றாழை அளிக்கும் பலன்களை இங்கு காண்போம். 

காலம் காலமாக கற்றாழை பல மருத்துவ பலன்களுக்காக அறியப்படுகிறது. உடலின் பல்வேறு பிரச்சனைகளை எளிதில் போக்கும் சக்தியும் கொண்டுள்ளது. கிறாமப்புறங்களிலும் கற்றாழை உடல் உஷ்ணத்திற்கு பயன்படுகிறது. இதன் உள்ளே இருக்கும் பசையை மட்டுமே பயணபடுத்துகின்றனர். 

(1 / 7)

தலை முடி உதிர்தல் மற்றும் வறண்ட முடி போன்ற அனைத்து விதமான தலைமுடி பிரச்சனைகளுக்கும் கற்றாழை ஜெல் பயன்படுத்தப்படுகிறது.  இதன் ஜெல்லை நேரடியாகவும் பயன்படுத்தலாம் அல்லது எடுத்து வைத்து சில நாட்கள் கழிததும் பயன்படுத்தலாம். அதிலும் குறிப்பாக இந்த ஜெல்லை பயன்படுத்தும் முன் நீரில் கழுவுவது நல்லதாகும். 

(2 / 7)

முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள், சுருக்கங்கள், கரு வளையம் என எல்லா வித முக தொல்லைகளையும் தடுக்கும் சக்தி இந்த காற்றாழையில் உள்ளது. கற்றாழையை எடுத்து தண்ணீரில் கழுவி விட்டு முகத்தில் நேரடியாக தடவ வேண்டும். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர முகம் பொலிவடையும். இது உண்மையான பலன்களை தரும். 

(3 / 7)

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி, பிறப்பு உறுப்பில் ஏற்படும் அலர்ஜி, புண்கள் போன்றவவையும் இந்த கற்றாழை குணப்படுத்துகிறது. மேலும் பல வயிறு தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்த கற்றாழை பயன்படுகிறது. அடிப்பட்ட காயங்களில் கற்றாழை போட்டு வர விரைவில் அந்த புண் குணமாகும். 

(4 / 7)

சிறுநீர் தொற்று இருப்பவர்கள் கற்றாழையுடன் கற்கண்டு அல்லது வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர சில தினங்களில் சரியாகும். மேலும் உடலின் வெப்பநிலையை குறைக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. அடிக்கடி சளி தொந்தரவு ஏற்படுபவர்கள் காற்றாழையை சாப்பிடக்கூடாது.  

(5 / 7)

கற்றாழையின் மருந்து மகத்துவத்தை கி.பி. 17 ஆம் நூற்றாண்டிலேயே ஆப்பரிக்கர்கள் கண்டறிந்து உலகத்துக்கு அறியப்படுத்தினர்.கற்றாழையின் இலையில் ‘அலோயின்’ ்அலோசோன்’ போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. ‘அலோயின்’ வேதிப்பொருளின் அளவு நான்கிலிருந்து இருபத்து ஐந்து சதம் வரை இதன் இலையில் காணப்படுகிறது.

(6 / 7)

கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” எனப்படும் “கூழ்” சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்கப்படுகிறது. இதன் தேவைக்கு இயற்கை சூழ்நிலையிலிருந்து கற்றாழைச் செடிகள் சேகரிக்கப்பட்டு பக்குவப்படுத்திய பிறகு மருந்துப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது. இருப்பினும், தரம் வாய்ந்த கற்றாழைக்கூழ், எடுப்பதற்கு தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், குர்குவா தீவுகள், இந்தியா ஆகிய நாடுகளில் வணிக ரீதியாக பயிர் செய்யப்படுகிறது.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்