சூது கவ்வும் 2 முதல் மிஸ் யூ வரை! திரையரங்குகளில் வெளியான படங்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சூது கவ்வும் 2 முதல் மிஸ் யூ வரை! திரையரங்குகளில் வெளியான படங்கள்!

சூது கவ்வும் 2 முதல் மிஸ் யூ வரை! திரையரங்குகளில் வெளியான படங்கள்!

Dec 13, 2024 01:31 PM IST Suguna Devi P
Dec 13, 2024 01:31 PM , IST

  • ஆண்டின் இறுதி மாதமான இந்த மாதத்தில் பல தமிழ் படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் இன்று திரையரங்குகளில் பல படங்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் திரையுலகில் ஆண்டிற்கு பல படங்கள் வெளியாவது கடந்த சில ஆண்டுகளாகவே வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் ஆண்டின் இறுதி மாதமான இந்த மாதத்தில் பல தமிழ் படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் இன்று திரையரங்குகளில் பல படங்கள் வெளியாகியுள்ளன. பல படங்கள் வெளியானாலும் ஒரு சில படங்கள் மட்டுமே மக்கள் மனதை ஆட்கொள்கின்றன. இன்று வெளியான படங்களில் எந்தெந்த படங்கள் ரசிகர்களின் மனதை கவரும் எனப் பொறுத்திருந்து பார்ப்போம். 

(1 / 6)

இயக்குநர் நலன் குமாராசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன் உட்பட பலர் நடித்து கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் திரைப்படம், தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மிர்ச்சி சிவா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வாகை சந்திரசேகர், எம்.எஸ்.பாஸ்கர், ஹரீஷா, அருள்தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தினை திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார்,மற்றும்  தங்கம் சினிமாஸ் எஸ்.தங்கராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இன்று இப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது. 

(2 / 6)

இயக்குநர் நலன் குமாராசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன் உட்பட பலர் நடித்து கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் திரைப்படம், தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மிர்ச்சி சிவா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வாகை சந்திரசேகர், எம்.எஸ்.பாஸ்கர், ஹரீஷா, அருள்தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தினை திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார்,மற்றும்  தங்கம் சினிமாஸ் எஸ்.தங்கராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இன்று இப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது. (BookMyShow)

இயக்குநர் பிரசாந்த் முருகேசன் இயக்கத்தில் நடிகர் பரத் ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள படம்  “ஒன்ஸ் அபார்ன் ஏ டைம் இன் மெட்ராஸ்”, இப்படத்தில் அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி, அபிராமி மற்றும் தலைவாசல் விஜய் உட்பட பலர் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களை கவருமா எனப் பார்க்கலாம். 

(3 / 6)

இயக்குநர் பிரசாந்த் முருகேசன் இயக்கத்தில் நடிகர் பரத் ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள படம்  “ஒன்ஸ் அபார்ன் ஏ டைம் இன் மெட்ராஸ்”, இப்படத்தில் அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி, அபிராமி மற்றும் தலைவாசல் விஜய் உட்பட பலர் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களை கவருமா எனப் பார்க்கலாம். (IMDB)

இயக்குநர் என்.ராஜசேகர் என்பவரது இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்து இன்று வெளியாகியுள்ள காதல் திரைப்படம் மிஸ் யூ, இப்படத்தில் ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் கருணாகரன், பால சரவணன் மற்றும் சஷ்டிகா உட்பட பலர் நடித்துள்ளனர். காதல் ஜோடிகளின் கதையை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இப்படத்தினை சாமுவேல் மாத்தியூஸ் தயாரித்துள்ளார். 

(4 / 6)

இயக்குனர் ரங்கநாதன் இயக்கி நடித்து இன்று வெளியாகியுள்ள திரைப்படம் தென் சென்னை, இப்படத்தில் ரியா முருகன் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. 

(5 / 6)

இயக்குனர் ரங்கநாதன் இயக்கி நடித்து இன்று வெளியாகியுள்ள திரைப்படம் தென் சென்னை, இப்படத்தில் ரியா முருகன் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. 

இயக்குனர் எஸ்.பி.பகவதி பாலா என்பவர் இயக்கி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இன்று வெளியாகியுள்ள படம் விடிஞ்சா எனக்கு கல்யாணம். இப்படத்தில் நடிகர்கள் ஷாகில், யூகிதா மற்றும் சினேகா ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

(6 / 6)

மற்ற கேலரிக்கள்