Top shopping destinations in India: ஷாப்பிங் பிரியர்களை கவரும் டாப் இடங்கள்
இயற்கை அழகு கொஞ்சும் சுற்றுலா தலங்கள், பாரம்பரிய கட்டிடங்களுடன் கூடிய ஆன்மிக தலங்கள், பல்வேறு விதமான சுவை மிகுந்த உணவுகள் மட்டுமில்லாமல் ஏராளமான பொருள்களின் ஷாப்பிங் மையமாகவும் இந்தியா உள்ளது. உள்நாட்டினர், வெளிநாட்டினர் என அனைத்து தரப்பினரையும் கவரும் சில முக்கியமான ஷாப்பிங் இடங்களை பார்க்கலாம்.
(1 / 8)
ஷாப்பிங் பிரியர்களின் சொர்க்கபுரியாக இந்தியா இருப்பது பலருக்கும் தெரியாது. இங்கு பல்வேறு விதமான சந்தைகள், பாரம்பரியம் முதல் லேட்டஸ்ட் பேஷன் பொருள்களின் கடைகள் தில்லி, மும்பை, ஹைதரபாத் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் நிரம்பியுள்ளன. அவற்றில் சில முக்கியமான ஷாப்பிங் மையங்களை பார்க்கலாம். (freepik )
(2 / 8)
சரோஜினி நகர், தில்லி - உள்ளூர்வாசிகள் முதல் வெளியூர்காரர்கள் வரை அனைத்துதரப்பினரையும் மிகவும் கவர்ந்த சந்தைகளில் ஒன்றாக சரோஜினி நகர் சந்தை உள்ளது. இங்கு பட்ஜெட் விலையில் துணிகள், காலனிகள், அணிகலன்கள் என பாரம்பரியமான பொருள்கள் முதல் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் பேஷன் பொருள்கள் வரை வாங்கி குவிக்கலாம். வெறும் பொருள்கள் மட்டுமில்லாமல் தெருவோர உணவுகளுக்கும் மிகவும் பிரசித்தி பெற்றதாக இந்த இடம் அமைந்துள்ளது.( Amal KS / Hindustan Times)
(3 / 8)
கொலாபா காஸ்வே, மும்பை: மிகவும் பிரபலமான ஷாப்பிங் தெருவாக திகழும் இங்கு அனைத்து விதமான ஆடைகளை வாங்கலாம். அதுமட்டுமில்லாமல் நகைகள், அணிகலன்கள் உள்பட இதர பொருள்கள் இங்கு உண்டு. குறைவான விலை முதல் அதிக விலை வரை அனைத்து கடைகளும் உள்ளன. ஷாப்பிங் செய்வதற்கு இடையே இளைப்பாறும் விதமாக பிரபலமான உணவகங்களும், காபி ஷாப்களும் இந்த தெருவில் அமைந்துள்ளன (pinterest)
(4 / 8)
ஜன்பாத், ஜெய்ப்பூர்: பாரம்பரியமான ராஜஸ்தானி வகை ஆடைகள் மற்றும் கைவினைப் பொருள்களுக்கான மார்கெட்டாக இது உள்ளது. இவற்றுடன் நுணுக்கமான வெள்ளி நகைகள், வண்ணமயமான டை பேபிரிக்குகளையும் வாங்கலாம்(pinterest)
(5 / 8)
அஞ்சுனா பிளே மார்க்கெட், கோவா: வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும் இந்த மார்க்கெட் போஹேமியன் வைப் எனப்படும் வண்ணமயமான டெக்கரேஷன்களுக்கு புகழ் பெற்றவையாக இந்த சந்தை அமைந்துள்ளது. ஆடை ஆபரணங்கள் அணிகலன்கள் முதல் அனைத்து பொருள்களுடன் சுவை மிகுந்த உணவுகளும் கிடைக்கும் சந்தையாக அமைந்துள்ளது(pinterest)
(6 / 8)
கமர்ஷியல் தெரு, பெங்களூரு: கர்நாடகா தலைநகர் பெங்களூருவின் பழமையான, மிகப் பெரிய ஷாப்பிங் பகுதியாக இந்த இடம் உள்ளது. ஆடை, ஆபரணங்களுடன் எலெக்ட்ரானிக் பொருள்களையும் இங்கு குறைவான விலைக்கு வாங்கலாம். அத்துடன் உணவுகளை பொருத்தவரை பல்வேறு வகையான பாஸ்ட் புட்களை ருசிக்கலாம்(pinterest)
(7 / 8)
மால் சாலை, ஷிம்லா: குளுகுளு நகரமான ஷிம்லாவின் பிரபலமான ஷாப்பிங் இடமாக இந்த மால் சாலை உள்ளது. சாலையோர வியாபாரிகள், கடைகள் பிசியாக இருந்து இந்தப் பகுதியில் துணிகள், நினைவு பொருள்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் ஆகியவற்றை வாங்கலாம். இந்த சாலை காலனித்துவ கட்டிடகலைக்கு பெயர் பெற்றதாகவும், அழகான மலைப்பகுதிகளுக்கு இடையே ரம்மியமாக காட்சி அளிக்கும் இடமாகவும் உள்ளது(Unsplash)
(8 / 8)
லாட் பஜார், ஹைதராபாத்: ஹைதராபாத்திலுள்ள புகழ் பெற்ற சந்தைகளில் ஒன்றாக இருக்கும் லாட் பஜார், சூடி பஜார் என்றும் அழைக்கப்படுகிறது. பாரம்பரிய ஹைதரபாத் நகைகள், வளையல்கள், முத்துக்கள் போன்றவற்றின் பல்வேறு வகைகளை வாங்குவதற்கான சிறந்த இடமாக உள்ளது. நுணுக்கமான, அழகிய வேலபாடுகள் நிறைந்த பொருள்களுக்கு பெயர் பெற்ற இடமாகவும் உள்ளது(pinterest)
மற்ற கேலரிக்கள்