Loksabha Election: சச்சின் முதல் ரஹானே வரை.. மும்பையில் வாக்களித்த கிரிக்கெட் வீரர்கள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Loksabha Election: சச்சின் முதல் ரஹானே வரை.. மும்பையில் வாக்களித்த கிரிக்கெட் வீரர்கள்

Loksabha Election: சச்சின் முதல் ரஹானே வரை.. மும்பையில் வாக்களித்த கிரிக்கெட் வீரர்கள்

May 20, 2024 03:43 PM IST Manigandan K T
May 20, 2024 03:43 PM , IST

  • 2024 மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (மே 20) நடைபெறுகிறது. இதில் மகாராஷ்டிராவில் 13 இடங்களும் அடங்கும். சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், அஜிங்க்யா ரஹானே உள்ளிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்கள் மும்பையில் இன்று தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

2024 மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (மே 20) நடைபெறுகிறது. ஐந்தாம் கட்டமாக 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் மகாராஷ்டிராவில் உள்ள 13 இடங்களும் அடங்கும். சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், அஜிங்க்யா ரஹானே உள்ளிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்கள் மும்பையில் இன்று தங்களது வாக்குரிமையை பயன்படுத்தினர்.

(1 / 6)

மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரும் அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கருடன் காணப்பட்டார். நகரின் பாந்த்ரா மேற்கு பகுதியில் டெண்டுல்கரின் வீடு உள்ளது. வாக்களித்த பிறகு வெளியே வந்த சச்சின்.

(2 / 6)

வாக்களித்துவிட்டு மையத்திலிருந்து வெளியே வந்த சச்சின், “நான் ECI இன் தேசிய அடையாளமாக இருக்கிறேன், உங்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பல நடவடிக்கைகளில் பங்கேற்கிறேன். வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் எதிர்காலம் வாக்களிப்பதில் தான் உள்ளது” என்றார். அவருடைய மகன் அர்ஜுனும் உடனிருந்தார்.

(3 / 6)

தெற்கு மும்பையில் உள்ள வோர்லியில் வசிக்கும் சுனில் கவாஸ்கரும் இன்று வாக்களித்தார். வாக்களித்த பிறகு கவாஸ்கர் பேசுகையில், “வாக்களிக்கும் உரிமை உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும். ஏனென்றால் அவர்களுக்காகவும் அவர்களின் கருத்துக்களுக்காகவும் அரசாங்கம் அமைக்கப் போகிறது." என்றார்.

(4 / 6)

இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவும் காலையில் வாக்களித்தார்.

(5 / 6)

இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவும் காலையில் வாக்களித்தார்.

கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானே மும்பையில் தனது வாக்குரிமையை பயன்படுத்தினார். வாக்களித்த பிறகு, ரஹானே தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வாக்களித்த பிறகு, ரஹானே சமூக ஊடகங்கள் மூலம் ஒரு போஸ்ட்டை வெளியிட்டு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்