துலாம் முதல் மீனம் ராசியினர் வரை.. அட்சய திருதியையில் செய்ய வேண்டிய தானம் என்ன?.. வாங்க வேண்டிய பொருள்கள் எவை?
- இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப். 30ம் தேதி புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் லட்சுமி தேவியையும், குபேரனையும் வழிபட்டு தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் வாங்குவது நல்ல பலன்களை தரும் என்று சொல்லப்படுகிறது.
- இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப். 30ம் தேதி புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் லட்சுமி தேவியையும், குபேரனையும் வழிபட்டு தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் வாங்குவது நல்ல பலன்களை தரும் என்று சொல்லப்படுகிறது.
(1 / 8)
இந்து மத நம்பிக்கைகளின்படி, அட்சய திருதியை நாளில் சில பொருட்களை தானமாக கொடுப்பது மற்றும் சில பொருட்களை வாங்குவதும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அந்தவகையில், அட்சய திருதியையில் துலாம் முதல் மீனம் ராசி வரையிலான 6 ராசிக்காரர்கள் என்னென்ன பொருட்களை வாங்க வேண்டும், என்னென்ன பொருட்களை தானம் செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
(Image: Canva)(2 / 8)
துலாம்: துலாம் ராசியினர் பால், தயிர், பேரிச்சை பழம் போன்றவற்றை தானம் செய்வது நன்மை தரும். முந்திரி, திராட்சை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தி தரும்.
(3 / 8)
விருச்சிகம்: விருச்சிக ராசி அன்பர்கள் பழரசம் தானம் செய்வது நன்மை தரும். வெள்ளரி மற்றும் தர்பூசணி பழங்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தி தரும்.
(4 / 8)
தனுசு: தனுசு ராசியினர் ஏழைகளுக்கு பழங்கள் மற்றும் நீர் ஆகாரம்ம் தானம் செய்வது நன்மை தரும். வெல்லம் வாங்குவது வீட்டில் லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தி தரும்.
(5 / 8)
மகரம்: மகர ராசி அன்பர்கள் இனிப்புகள், நிலக்கடலை மற்றும் கிழங்குகளை நன்கொடை அளிப்பதும், உப்பு, தளபாட பொருட்கள் வாங்குவதும் மங்களகரமாக கருதப்படுகிறது.
(6 / 8)
கும்பம்: கும்ப ராசியினர் கடலை, இளநீர், கனிகள் மற்றும் சத்தான பொருட்களை தானம் செய்வது நற்பலன்களை தரும். அட்சய திருதியை நாளில் அரிசி வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தி தரும்.
(7 / 8)
மீனம்: மீனம் ராசிக்காரர்கள் மஞ்சள், இனிப்புகள் தானம் செய்வது நன்மை தரும். மோர் மற்றும் பால் பொருள்கள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை கொண்டு வரும்.
(8 / 8)
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்