கோடிகளில் பணம் சம்பாதிக்கும் இந்திய யூடியூப்பர்கள்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Top 10 richest YouTubers in India: டிஜிட்டல் உலகில் ஒரு அங்கமாக இருந்து வரும் யூடியூப் சேனல்கள் கண்டெண்ட்கள், விடியோக்களை உருவாக்கி அதன் மூலம் தினமும் மில்லியன் டாலர்களை சம்பாதிப்பவர்கள் பலரும் இருக்கிறார்கள். இவர்கள் பின் தொடர்பவர்களுக்கு லட்சக்கணக்காணோர் உள்ளார்கள்
(1 / 12)
உலக அளவில் கவனம் பெற்ற இந்திய யூடியூப்பர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். யூடியூப்பைப் பயன்படுத்தி கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்கும் டாப் 10 இந்திய யூடியூப்பர்கள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்.
(2 / 12)
டெக்னிக்கல் குருஜி (Technical Guruji) என்ற யூடியூப் சேனலில் தொழில்நுட்பம் டிப்ஸ் சார்ந்த பல விடியோக்களை பதிவிட்டு வரும் கெளரவ் செளத்ரி, யூடியூப்பில் கோடி கோடியாக சம்பாதித்து வருகிறார். அவரது சொத்து மதிப்பு இப்போது ரூ. 356 கோடி என கூறப்படுகிறது(instagram)
(3 / 12)
பிபி கி வைன்ஸ் (Bibi Ki Vines) என்ற யூடியூப் சேனலை வைத்திருக்கும் புவன் பாம், இதுவரை ரூ.122 கோடி சம்பாதித்துள்ளாராம். இவர் பல வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்(instagram)
(4 / 12)
தனது பெயரில் ஒரு சேனலை நிறுவியுள்ள அமித் பதானாவின் (Amit Bhadana) சொத்து மதிப்பு ரூ.80 கோடி. இந்த சேனலில் பல்வேறு விதமான பொழுதுபோக்கு கண்டெண்ட்களை பதிவிட்டு வருகிறார்(instagram)
(5 / 12)
கேரிமினாட்டி (Carryminati) என்ற யூடியூப் சேனலை வைத்திருக்கும் அஜய் நாகர் சொத்து நிகர மதிப்பு ரூ. 50 கோடி என சொல்லப்படுகிறது. காமெடி, கேமிங், ராப் பாடல் விடியோக்களை பகிர்ந்து வருகிறார்(instagram)
(6 / 12)
நிஷா மதுலிகா (Nisha Madhulika) என்பவர் தனது பெயரில் ஒரு சேனலை வைத்துள்ளார். இவர் பலதரப்பட்ட இந்திய உணவுகளை தயார் செய்து கோடிகளை அள்ளி கொண்டிருக்கிறார். உணவு சமைக்கும் விடியோக்கள் மூலமே கோடீஸ்வரி ஆகியிருக்கும் இவரது சொத்து மதிப்பு ரூ.43 கோடி(instagram)
(7 / 12)
சந்தீப் மகேஸ்வரி (Sandeep Maheshwari) என தனது பெயரில் யூடியூப் சேனலை வைத்திருக்கும் இவர், மோட்டிவேஷனல் பேச்சு மற்றும் விடியோக்களின் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.41 கோடி(instagram)
(8 / 12)
கான் சர் என்ற யூடியூப் சேனலை வைத்திருக்கும் பைசல் கான் நாட்டு நடப்பு, நிகழ்வுகள், சினிமா பற்ற பலதரப்பட்ட விடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவர் ரூ.41 கோடி மதிப்பில் சொத்து வைத்துள்ளாராம்(instagram)
(9 / 12)
ஆஷிஷ் சஞ்சலானி (Ashish Chanchalani) என்ற தனது பெயரில் யூடியூப் சேனலை நிறுவியுள்ள ஆஷிஷ் சஞ்சலானியின் சொத்து மதிப்பு ரூ.40 கோடி. இவர் பல்வேறு விதமான பொழுதுபோக்கு விடியோக்களை பகிர்ந்து வருகிறார்(instagram)
(10 / 12)
ஹர்ஷ் பெனிவால் (Harsh Beniwal) என தனது சொந்த பெயரில் யூடியூப் சேனலை நிறுவியிருக்கும் இவர் பொழுதுபோக்கு, ட்ரோல் விடியோக்கள் மூலம் ரூ.30 கோடி சம்பாத்திதுள்ளார் (instagram)
(11 / 12)
தேசிய அளவில் ட்ரெண்டான துருவ் ரதி (Dhruv Rathee) தனது பெயரில் ஒரு யூடியூப் சேனலைத் திறந்து, அதன் மூலம் ஏற்கனவே ரூ.24 கோடி சம்பாதித்துள்ளார். நாட்டு நடப்புகள், நடந்து முடிந்த நிகழ்வுகள் குறித்த விளக்க விடியோக்களை பகிர்ந்து ட்ரெண்டானார் (instagram)
மற்ற கேலரிக்கள்