எடை குறைப்புக்கு உணவு பழக்கத்தில் சேர்க்க வேண்டிய தாவரம் சார்ந்த புரதங்கள்!
- உடல் பருமன், இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக சில தாவரம் சார்ந்த உணவுகள் அமைந்துள்ளன. பிரபல ஊட்டச்சத்து நிபுணர் சரிகா ஷா புரதம் நிறைந்த தாவர உணவுகள் சில வற்றை உணவில் தவிர்க்காமல் சேர்க்குமாறு வலியுறுத்துகிறார்.
- உடல் பருமன், இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக சில தாவரம் சார்ந்த உணவுகள் அமைந்துள்ளன. பிரபல ஊட்டச்சத்து நிபுணர் சரிகா ஷா புரதம் நிறைந்த தாவர உணவுகள் சில வற்றை உணவில் தவிர்க்காமல் சேர்க்குமாறு வலியுறுத்துகிறார்.
(1 / 5)
உடற்பயிற்சி ஆர்வலர்கள் மத்தியில் தாவரம் சார்ந்த புரத உணவுகள் மிகவும் பிரபலமாகி வருகிறது. இதற்கு சரியான காரணமும் உள்ளது. இவ்வகை உணவுகளை சாப்பிடுவதனால் சர்க்கரை நோய் பாதிப்பு தள்ளி வைப்பதோடு, உடல் பருமன், இதயம் தொடர்பான நோய் பாதிப்பு ஏற்படாமலும் பார்த்துக்கொள்ளலாம். இந்த உணவுகளில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், நீர்ச்சத்துகள் போன்றவை ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கிறது. கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்து உடல் எடை குறைய உதவுகிறது(Pinterest, Pixabay)
(2 / 5)
சணல் விதைகள்: பன்முகத்தன்மை கொண்ட தாவரமாக சணல் உள்ளது. மூன்று டேபிள் ஸ்பூன் சணலில் 10 கிராம் வரை புரதம் உள்ளது. நீங்கள் சாப்பிடும் உணவில் எதில் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம். ரொட்டி மாவு பிசைவதற்கு முன்பு இந்த சணல் விதைகளை பொடியாக்கி மேலே தூவி கொள்ளலாம்(Pinterest)
(3 / 5)
சியா விதைகள்: இரண்டு கிராம் சியா விதைகளில் அப்படியே இரட்டிப்பாக 4 கிராம் புரதம் உள்ளது. நீங்கள் தயார் செய்யும் அவகோடா டோஸ்டிவ், சியா புட்டிங் சிறிது அளவு சேர்த்து சாப்பிடலாம். காலைப் பொழுதில் இதை சாப்பிட்டு வயிறுமுட்ட தண்ணீர் குடித்தால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருப்பதோடு உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தாது(Pinterest)
(4 / 5)
பூசணி விதைகள்: கால் கப் பூசணி விதைகளில் 8 கிராம் புரதம் நிரம்பியுள்ளது. நீங்கள் தயார் செய்யு டோஸ்ட், சாலட் ஆகியவற்றில் டாப்பிங்காக பொடியாக்கி சேர்க்கலாம். குறிப்பாக அவல் வைத்து தயார் செய்யும் உணவுகளின் மேலே சேர்த்தால் நல்ல சுவையை உணரலாம். நீங்கள் வீட்டில் தயார் செய்யும் எந்த உணவில் இதனை சேர்த்து உணவின் சுவையை கூட்டலாம்(Pixabay)
மற்ற கேலரிக்கள்