Senthil Balaji hospitalized: செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெஞ்சுவலி! ஓமந்தூரார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை!
- Senthil Balaji hospitalized: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகின்றது
- Senthil Balaji hospitalized: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகின்றது
(1 / 7)
புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
(2 / 7)
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில்தான் சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
(HT_PRINT (PTI))(3 / 7)
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்த நிலையில் இதுவரை 48 முறை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
(ANI)(4 / 7)
புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் ஸ்டேன்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
(5 / 7)
அவரது உடலை கண்காணித்த மருத்துவர்கள் அவரை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்க பரிந்துரை செய்தனர்.
(6 / 7)
நெஞ்சு வலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்த நிலையில் அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
மற்ற கேலரிக்கள்