கல்லறையில் சினிமா பார்க்கும் அனுபவம்..தண்ணீரில் திரையரங்கம் - உலகின் மிக விசித்திரமான திரையரங்குகள் லிஸ்ட் இதோ
- சினிமா திரையரங்குகளில் திரைப்படங்களை பார்ப்பதென்பது பலருக்கும் சுவாரஸ்ய அனுபவத்தை தரும். அந்த வகையில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் சில விசித்திரமான திரையரங்குகளும் அவற்றில் உள்ள மெய் சிலிர்க்க வைக்கும் விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம்
- சினிமா திரையரங்குகளில் திரைப்படங்களை பார்ப்பதென்பது பலருக்கும் சுவாரஸ்ய அனுபவத்தை தரும். அந்த வகையில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் சில விசித்திரமான திரையரங்குகளும் அவற்றில் உள்ள மெய் சிலிர்க்க வைக்கும் விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம்
(1 / 7)
உலகின் சில விசித்திரமான திரையரங்குகளில் பட்டியலில் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் திரையரங்குகள் பல உள்ளன. இங்கு படம் பார்ப்பவர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை தரக்கூடியதாக இருக்கும். காலப்போக்கில் சினிமாக்களும், அதை காட்டும் தொழில்நுட்பமும் மாறி கொண்டே வருகிறது. அதற்கு உதரணமாக படங்களை 3D IMAX, 4DX என பல தொழில்நுட்பங்களிலும் சினிமாக்களை பார்த்து ரசிக்கலாம். சினிமாக்களை தயாரிப்பதற்கு பெரும் தொகை செலவிடப்படுகிறது. உலகின் விசித்திரமான திரையரங்குகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இந்த திரையரங்குகளை பற்றி தெரிந்தால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்
(2 / 7)
காலப்போக்கில் சினிமாக்களும், அதை காட்டும் தொழில்நுட்பமும் மாறி கொண்டே வருகிறது. அதற்கு உதரணமாக படங்களை 3D IMAX, 4DX என பல தொழில்நுட்பங்களிலும் சினிமாக்களை பார்த்து ரசிக்கலாம். சினிமாக்களை தயாரிப்பதற்கு பெரும் தொகை செலவிடப்படுகிறது. உலகின் விசித்திரமான திரையரங்குகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இந்த திரையரங்குகளை பற்றி தெரிந்தால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்
(3 / 7)
கோட்டைக்குள் படம் பார்க்கும் உணர்வு: எல்லோரும் சினிமாக்களை திரையரங்குகளில் பார்ப்பது இயல்பானது தான். ஒரு கோட்டையில் படம் பார்ப்பதாக கற்பனை செய்து பாருங்கள். லண்டனில் உள்ள தி கேஸில் சினிமாவில் உங்களுக்கு இந்த அனுபவம் கிடைக்கும். 1913ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தத் திரையரங்கில் உள்ள பெரும்பாலான விஷயங்கள் இன்றும் அப்படியே வைக்கப்பட்டுள்ளன. இந்த திரையரங்கில் கோட்டைக்குள் அரசர்கள் அமர்ந்து சோபாவில் அமர்ந்து படம் பார்த்து மகிழலாம்
(4 / 7)
கல்லறையில் படம் பார்க்கும் அனுபவம்: நீங்கள் எப்போதாவது ஒரு கல்லறையில் திகில் திரைப்படத்தைப் பார்க்க நினைத்திருக்கிறீர்களா? ஹாலிவுட் ஃபாரெவர் கல்லறையில் இதே போன்ற அனுபவத்தைப் பெறுவீர்கள். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இந்த வெளிப்புற திரையரங்கில், சரவுண்ட் சவுண்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய திரைப்படத்தை திறந்த வெளியில், அதுவும் கல்லறையில் அமர்ந்து பார்த்து மகிழலாம்
(5 / 7)
தண்ணீருக்கு நடுவில் கட்டப்பட்ட அற்புதமான தியேட்டர்: ஒரு அற்புதமான இடத்தில் தண்ணீருக்கு நடுவில் ஒரு டெக்கில் உட்கார்ந்து, முன்னால் உள்ள தண்ணீரில் வைக்கப்பட்டுள்ள ஒரு திரையில் ஒரு ப்ரொஜெக்டரில் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதை கற்பனை செய்து பாருங்கள். இந்த அனுபவத்துக்கு நீங்கள் தாய்லாந்தில் உள்ள ஆர்க்கிபெலாகோ திரையரங்குக்கு செல்ல வேண்டும். அங்கு ஒரு தடாகத்தில் மரத்தடியில் அமர்ந்து திரைப்படம் பார்க்கும் அனுபவத்தைப் பெறுவீர்கள். இந்த குளம் அனைத்து பக்கங்களிலும் உயரமான பாறைகள் மற்றும் காடுகளால் சூழப்பட்டுள்ளது
(6 / 7)
நீங்கள் வீட்டிலிருந்து உணவு மற்றும் பன்டங்களை கொண்டு வர அனுமதிக்கும் திரையரங்கம். ஒரு திரைப்படத்தைப் பார்க்கச் செல்லும்போது, உங்கள் பையில் வைத்திருக்கும் எந்த உணவுப் பொருளையும் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் ஸ்காட்லாந்தின் வெஸ்ட் சைட் சினிமாவில், நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து உணவுப் பொருள்களையும் பானங்களையும் கொண்டு வந்து ஒரு வட்ட மேசையில் ஒன்றாக அமர்ந்து திரைப்படம் அல்லது நிகழ்ச்சிகளை ரசிக்கலாம்
(7 / 7)
படம் பார்க்கும்போது சினிமாவில் வாழும் அனுபவம்:தென் கொரியாவில் கட்டப்பட்ட சிஜிவி ஷியோங்டாம் சினி சிட்டியின் திரையரங்கில், நீங்கள் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போல் உணர்வு இல்லாமல், ஆனால் திரைப்படத்தில் இருப்பது போல் உணர்வு ஏற்படும். ஏனெனில் அங்குள்ள உயர்தர விர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவம் உங்கள் மனதைக் கவரும். இங்கே ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு ஹெட்ஃபோன்கள் மற்றும் கண்ணாடிகள் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்றவாறு இருக்கைகள் நகரும், ஒளியமைப்பு அனுபவம், நறுமணம், மூடுபனி மற்றும் தண்ணீர் தெளிப்பு போன்றவற்றை படத்தின் போது உணர்வீர்கள்
மற்ற கேலரிக்கள்