Migraine pain: கடுமையான வலி, தொல்லை தரும் ஒற்றை தலைவலி பாதிப்பு.. கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுகள்
Foods to Avoid Migraine pain: ஒற்றைத் தலைவலி என்பது சாதாரண தலைவலியை விட அதிக வலியை கொண்டதாக இருக்கும். சரியான உணவு முறையை பின்பற்றுவதன் மூலம், ஒற்றை தலைவலி பாதிப்பை பெருமளவில் குறைக்கலாம் என கூறப்படுகிறது
(1 / 7)
ஒற்றைத் தலைவலி என்பது ஒரு வகையான நரம்பியல் கோளாறு. இதன் காரணமாக, இந்த பாதிப்பு இருப்பவர்கள் நீண்ட காலம் ஒரு பக்கத்தில் தலைவலி என்பது இருக்கும். இந்த பிரச்னை உங்கள் உணவு முறையுடனும் தொடர்புடையதாக இருக்கும் என கூறப்படுகிறது. எனவே ஒற்றை தலைவலி பாதிப்பு இருப்பவர்கள் அதிகமாக சாப்பிடக்கூடாத உணவுகள் சில இருக்கின்றன. அவை பற்றி தெரிந்து கொள்ளலாம்
(shutterstock)(2 / 7)
ஒற்றைத் தலைவலி பாதிப்பு இருப்பவர்களுக்கு குமட்டல், பிரகாசமான ஒளி மற்றும் சத்தமான ஒலி உணர்திறன், மங்கலான பார்வை போன்ற பல வகையான அறிகுறிகள் தோன்றும்
(shutterstock)(3 / 7)
சாக்லேட்டில் உள்ள டைரமைன் மூளையில் ரசாயன ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவதன் மூலம் ஒற்றைத் தலைவலியைத் தூண்டும். நீங்கள் ஒரு சாக்லேட் பிரியராக இருந்தால், அதை சிறிய அளவில் உட்கொள்ளுங்கள்
(shutterstock)(4 / 7)
பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். ஹாட் டாக் மற்றும் சலாமி போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் நைட்ரைட்டுகள் மற்றும் நைட்ரேட்டுகள் போன்ற ரசாயனங்கள் உள்ளன. இது ரத்த நாளங்களை பாதித்து ஒற்றைத் தலைவலியை அதிகரிக்கும்
(shutterstock)(5 / 7)
ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் பழைய சீஸ் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பழைய சீஸில் அதிக அளவு டைரமைன் உள்ளது, இது ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும். சீஸில் உள்ள புரதத்தின் முறிவால் டைரமைன் உருவாகும் என சொல்லப்படுகிறது
(shutterstock)(6 / 7)
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் ஒற்றைத் தலைவலியை அதிகரிக்கும். சிட்ரஸ் பழங்களில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் ஆக்டோபமைன் சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தும். உங்களுக்கு ஒற்றைத் தலைவலி வந்தால், சிட்ரஸ் பழங்களின் நுகர்வை குறைக்க வேண்டும்
(shutterstock)மற்ற கேலரிக்கள்