AC Bill Saving Tips: ஏசி குளிர்ச்சியும் வேணும், மின்சார கட்டணமும் குறைவாக இருக்கனுமா? அப்போ இத பாலே செய்யுங்க
- கோடை காலம் தொடங்கிவிட்டதால், சூரியன் சுட்டெரிக்க வெப்பநிலையானது 40 டிகிரி வரை சென்று உஷ்ணத்தை கிளப்புகிறது. இது போன்ற தருணங்களில் ஏசி பயன்பாடும் அதிகமாகவே உள்ளது. அதற்கு ஏற்றவாறு கரண்ட் பில் அதிகரித்து வருவது ஷாக் கொடுக்கும் ஏசி பில் அதிகமாக வராமல் இருக்க செய்ய வேண்டிய டிப்ஸ்களை பார்க்கலாம்

(1 / 5)
ஏசியின் வெப்பநிலையை மிகவும் குறைவாக வைக்க வேண்டாம். எவ்வளவு குறைவாக வைக்கிறோம் பில் தொகையானது அவ்வளவு அதிகமாக வரும். ஏசியின் வெப்பநிலையை 26 அல்லது 27 டிகிரி வரை வைப்பது நலம். இவ்வாறு செய்வதால் கம்பரசரின் அழுத்தம் குறைகிறது. இதனால் கரண்ட் பில்லையும் சேமிக்கலாம்
(2 / 5)
ஏசி ஆன் செய்துவிட்டு சில ஆஃப் செய்ய மறந்துவிடுகிறார்கள். இதனால் இரவில் நீண்ட நேரம் ஏசி ஓடுவதோடு, கரண்ட் பில்லும் அதிகமாகும். ஏசி எத்தனை மணி வரை ஓட வேண்டும் என்பதை தீர்மானம் செய்து கொண்டு அது தானாகவே ஆஃப் ஆகுமாறு டைமர் செட் செய்ய வேண்டும்
(3 / 5)
ஏசிக்கு உரிய சர்வீஸை உரிய நேரத்தில் செய்யவிட்டாலும் சிக்கலை சந்திக்க நேரிடும். சர்வீஸ் செய்வதன் மூலம் ஏசி சாதனத்தில் இருக்கும் அழுக்கு, தூசுகளை நீ்க்கப்படும். இதனால் அதன் செயல்பாட்டிலும் பிரச்னை இருக்காது. மின்சார நுகர்வும் வெகுவாக குறையும். அதேபோல் கேஸ் லீக் இருக்கிறதா என்பதையும் சோதித்து பார்க்க வேண்டும். கேஸ் குறைவாக இருந்தால் கம்பிரசருக்கு அதிக பாரம் ஏற்பட்டு, மின்சார கட்டணமும் அதிகமாகும்
(4 / 5)
ஏசியை ஆன் செய்யும் போது சீலிங் பேன்களை பலரும் ஆஃப் செய்வதுண்டு. இது நல்லதுதான் என்றாலும், ஏசியின் குளிர்ச்சி விரைவாக கிடைக்க பேன்களை வேகம் குறைவாக செயல்பட வைக்க வேண்டும். இதன் மூலம் ஏசி இருக்கும் அறை உடனடியாக குளிர்ச்சி அடைந்துவிடும் என்பதால், ஏசியையும் நீண்ட நேரம் ஆன் செய்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது
மற்ற கேலரிக்கள்