தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Corona New Variant Flirt: உஷார்! கொரோனாவின் புதிய உருமாற்றமான Flirt - யாருக்கெல்லாம் பாதிப்பு? தடுப்பு நடவடிக்கைகள்

Corona new variant FLiRT: உஷார்! கொரோனாவின் புதிய உருமாற்றமான FLiRT - யாருக்கெல்லாம் பாதிப்பு? தடுப்பு நடவடிக்கைகள்

May 14, 2024 05:57 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 14, 2024 05:57 PM , IST

  • FLiRT symptoms: கொரோனா நோய் பாதிப்பின் புதிய வேரியண்டாக FLiRT பாதிப்பு இந்தியாவிலும் ஏற்பட தொடங்கியுள்ளது. இந்த தொற்று யாருக்கெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும், தற்காப்பு நடவடிக்கைகள் என்ன என்பதை பார்க்கலாம்

கடந்த 2020ஆம் ஆண்டில் கொரோனா என்ற புதிய வகையிலான வைரஸ் பாதிப்பு உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நோய் பாதிப்பு காரணமாக பலரும் உயிரிழந்தனர். இந்த தொற்றும் பின்னர் ஓமைக்ரான் என உருமாறி, தற்போது FLiRT என்கிற புதிய வேரியண்ட் ஆக மாறி அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது 

(1 / 5)

கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை இந்த FLiRT பாதிப்பின் தாக்கம் அமெரிக்காவில் கணிசமாக உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இது ஒற்றை வைரஸ் ஆக இல்லாமல் JN.1 வழித்தோன்றலாக இருக்கின்றன

(2 / 5)

காய்ச்சல், இருமல், சளி வெளியேறுதல், தலைவலி, சோர்வு, குமட்டல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டால் சுவாசிப்பதில் சிரமம், உறுப்புகள் செயலிழப்பு போன்றவை ஏற்படலாம் என கூறப்படுகிறது. எனவே சுவாசிப்பதில் சிரமம், மார்பு வலி இருப்பவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுமாறு கூறப்படுகிறது

(3 / 5)

கொரோனா காலகட்டத்தில் பலரும் தடுப்பூசிகள் எடுத்துக்கொண்ட போதிலும், தடுப்பூசி போடாதவர்களுக்கு இந்த தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களை இந்த தொற்று பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்

(4 / 5)

மகாராஷ்ட்ராவில் தற்போது 91 பேருக்கு KP.2 தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவுரங்காபாத், புனே, அமராவதி, தானே, அகமத்நகர், நாசிக் ஆகிய பகுதிகளிலும் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியர்களிடம் ஏற்கனவே தொற்றுநோயை எதிர்த்துப் போராட போதுமான ஆன்டிபாடிகள் உள்ளன என்பதால்  அதிக பிரச்னை ஏற்படாது என நம்பப்படுகிறது

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்