WhatsApp New Features: வாட்ஸ்அப்பில் அறிமுகமாக இருக்கும் ஐந்து புதிய அம்சங்கள்
- வாட்ஸ்அப் பயன்பாட்டை எளிமையாக்கும் விதமாக பல்வேறு விதமான புதிய அம்சங்களை கொண்டு வருவதற்கான பணிகளும், அதன் பரிசோதனை முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கும் ஐந்து புதிய அம்சங்கள் குறித்து வாட்ஸ்அப் பீட்டா இன்போவில் தகவல் வெளியாகியுள்ளது.

(2 / 5)
வாட்ஸ்அப் சாட்டிங்கின்போது விருப்பம் இல்லாத நபரை பிளாக் செய்வதற்கு அவரது கணக்கை தேடி செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் உடனடியாக பிளாக் செய்வதற்கு வசதியாக சாட் லிஸ்ட் மற்றும் நோட்டிபிக்கேஷன் ஆகிய இரண்டு இடங்களில் ஷார்ட்கட் இடம்பெறவுள்ளது. இந்த ஷார்ட்கட் மூலம் எளிதில் பிளாக் செய்து கொள்ளலாம்
(3 / 5)
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்கள் குறித்து புகார் அளிக்கும் விதமாக புதிய அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் தேவையில்லாத ஸ்டேட்டஸ்கள் குறித்து அறிக்கை சமர்பித்து கொள்ளலாம்
(4 / 5)
வாட்ஸ்அப்பில் disappearing message என்ற அம்சம் மூலம் நமக்கு வரும் மெசேஜ்கள் எவ்வளவு நேரம் இருக்கலாம் என்பதை முடிவு செய்து கொள்ளலாம். அதேபோல் un-keep என்ற அம்சம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தனிப்பட்ட சாட் அல்லது குரூப் சாட்களை சேமிப்பை கட்டுப்படுத்தி கொள்ளலாம். இதனால் வாட்ஸ்அப்பில் ஸ்பெஸ் விரயம் ஆவது தவிர்க்கப்படும்
(5 / 5)
பழைய மெசேஜ்களை வாட்ஸ்அப்பில் தேடுவதென்பது மற்றொரு சிரமம் மிகுந்த விஷயமாகவே இருந்து வருகிறது. தற்போது நீங்கள் ரீவிசிட் செய்ய இருக்கும் மெசேஜ்கள் தொடர்பாக ஏதாவது கீவேர்டு டைப் செய்தே தேட வேண்டிய சூழல் இருந்து வருகிறது. இதை மேலும் எளிமையாக்கும் விதமாக தேதியை குறிப்பிட்டு விரும்பிய மெசேஜ்களை தேடிக்கொள்ளும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது
மற்ற கேலரிக்கள்