உலகம் முழுவதிலும் கூகுளில் அதிகம் தேடிய கேள்விகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்!
உலகம் முழுவதிலும் கூகுளில் அதிகம் தேடிய கேள்விகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
(1 / 11)
நீங்கள் ஒரு குழந்தையின் பெற்றோர் என்பது உங்களுக்கு எண்ணற் மகிழ்ச்சியைத் தரும் காரியமாகும். அதில் எண்ணற்ற சந்தேகங்களும், கேள்விகளும் எழும். இந்த டிஜிட்டல் காலத்தில், கூகுளில் நீங்கள் என்ன கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். புதிய பெற்றோர்கள் மற்றும் பெற்றோரியம் குறித்து பெற்றோருக்கு எண்ணற்ற சந்தேகங்கள் பெற்றோருக்கு ஏற்படுகிறது. பெற்றோர் அவற்றை உடனே கூகுளில் தேடுகிறார்கள். அதுபோல் பெற்றோர் கூகுளில் அதிகம் தேடிய கேள்விகள் என்னவென்று பாருங்கள்.
(2 / 11)
எனது குழந்தை ஏன் உறங்குவதேயில்லை? - இது மிகவும் பழைய கேள்விதான். ஆனால் குழந்தைகள் பசியால் உறங்குவதற்கு திண்டாடுகிறார்கள் அல்லது பற்கள் முளைப்பது போன்ற பிரச்னைகளாலும் உறங்க முடியாமல் தவிப்பார்கள். உறக்கத்தின் முறைகள் வயது ஏறும்போது மாறுகிறது. குறிப்பாக ஓராண்டுக்கு பின்னர் மாறிவிடும்.
(3 / 11)
புதிதாக பிறந்த குழந்தையை எப்படி குளிப்பாட்டுவது? - எவ்வளவு நேரம் குழந்தையை குளிப்பாட்ட வேண்டும்? எத்தனை முறை குழந்தையை குளிப்பாட்ட வேண்டும்? இவை புதிய பெற்றோருக்கு ஏற்படும் சந்தேகங்கள் ஆகும். இந்த கேள்விகள் இன்டர்நெட்டில் உள்ள பெற்றோர்கள் மற்றும் அதற்கு வழிகாட்டுபவர்களைக் பொறுத்து இதற்கான பதில்கள் இருக்கும்.
(4 / 11)
எனது குழந்தை சாப்பிட அடம் பிடிக்கிறது? எப்படி சாப்பிட வைப்பது? - குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகளை மட்டும்தான் சாப்பிடுவார்கள். குறிப்பாக தவழும் குழந்தைகள், மிகவும் தேர்ந்தெடுத்துதான் உண்பார்கள். இதனால் பெற்றோர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். புதிய உணவுகளைக் முயற்சிக்கும்போது மிகவும் கடினமாகும். சிலருக்கு புதிய வகையில் தயாரிக்கப்படும் உணவுகள் கிடைக்காது. இது காலம் செல்லச்செல்ல உதவும்.
(5 / 11)
என் குழந்தை ஏன் படுக்கையை ஈரமாக்குகிறது? - பெரும்பாலான குழந்தைகள் 6 வயது வரை படுக்கையை ஈரமாக்குவார்கள். சில குழந்தை மருத்துவர்கள், இதை அந்த வயது வரை பெரிய பிரச்னையாக கருத மாட்டார்கள். இது தவழும் குழந்தைகளுக்கு பொதுவாக ஏற்படும் பிரச்னையாகும்.
(6 / 11)
குழந்தையை அமைதிப்படுத்துவது எப்படி? - ஒரு குழந்தையை எப்படி அமைதிப்படுத்தவேண்டும் என்ற கேள்விக்கு யாராலும் சரியான பதிலைக் கூற முடியாது. ஒவ்வொரு குழந்தையையும் ஒவ்வொரு வகையில் சமாதானப்படுத்தவேண்டும். சில நேரங்களில் அவர்களை உங்கள் கைகளில் வைத்து ஆட்டவேண்டும். சில குழந்தைகளை தொட்டிலில் ஆட்டவேண்டும். இதனால் குழந்தைகள் பாதுகாப்பாகவும், ரிலாஸாகவும் உணர்வார்கள்.
(7 / 11)
படுக்கும்போது படுக்கை முழுவதும் உருள்வது - குழந்தைகள் இரவு நேரத்தில் உறங்கும்போது படுக்கை முழுவதும் உருண்டு ஓடுவார்கள். இதனால் பெற்றோர் கவலைப்படுவார்கள். இதனால் குழந்தைகள் வழக்கமாக எவ்வாறு உறங்குவார்கள் என்ற கேள்வி எழும். மேலும் உறக்கத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் கேள்வி எழுப்புவார்கள்.
(8 / 11)
என் குழந்தை காரணமின்றி அழுவது எதனால்? - குழந்தைகளுக்கு என்ன வேண்டும் என்று அவர்களால் வாய்விட்டு கேட்க முடியாது. அவர்கள் உங்களுடன் தொடர்புகொள்ளும் வழியே அழுகைதான். என்ன தேவையென்றாலும் அழுவார்கள். இது குழந்தைகள் எதற்காக அழுகிறார்கள் என்று எச்சரிக்கையாகி, அவர்களை சமாதானப்படுத்த முயல்வார்கள்.
(9 / 11)
எப்போது குழந்தைகள் பேசுவார்கள்? - பெரும்பாலான பெற்றோர்கள் இந்த கேள்வியை தேடியுள்ளார்கள். ஏனெனில் குழந்தைகள் சரியாக பேசத்துவங்கும் பெற்றோருக்கு ஒருவித பதற்றம் இருக்கும். குழந்தைகளை பேச தூண்டுவது பெற்றோருக்கு உரிய முக்கியமான வேலையாகும். அதற்காக அவர்கள் முயற்சித்துக்கொண்டேயிருப்பார்கள்.
(10 / 11)
சாப்பிட்டவுடன் குழந்தைக்கு ஏன் விக்கல் ஏற்படுகிறது? - பால் புகட்டிய பின்னர், குழந்தைகளுக்கு விக்கல் ஏற்படுவது பொதுவானதுதான். இதற்கு என்ன தீர்வு என்ற கேள்வி அதிகம் எழுப்பப்படும் கேள்வியாக உள்ளது. மேலும் குழந்தைக்கு விக்கல் எடுத்தால் என்ன செய்வது என்ற கேள்வியும் அதிகம் தேடப்பட்ட கேள்வியாகும்.
(11 / 11)
குழந்தைகளுக்கு ஏன் ஆட்டிசம் ஏற்படுகிறது? - ஆட்டிசம் என்றால் என்னவென்று பெற்றோர் முதலில புரிந்துகொள்ளவேண்டும். தங்களின் குழந்தைகள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்ற எண்ணம் பெற்றோருக்கு தொடர்ந்து அச்சம் ஏற்படும். இது தொடர்பான எண்ணற்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இவைதான் கூகுளில் அதிகம் தேடப்படும் கேள்விகளாக உள்ளது.
மற்ற கேலரிக்கள்