தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Find Latest Ipl Points Table 2024, Ipl Team Rankings

IPL 2024 Points Table: அனல் பறக்கும் ஐபிஎல் 2024..புள்ளிப் பட்டியலில் முந்துவது யார்? - முழு விபரம் இதோ..!

Apr 02, 2024 08:09 AM IST Karthikeyan S
Apr 02, 2024 08:09 AM , IST

  • IPL 2024 Points Table: ஹாட்ரிக் வெற்றிகளுடன், ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் 2024 புள்ளிகள் அட்டவணையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் மூன்று தோல்விகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

IPL 2024 Points Table: ஐபிஎல் 2024 இல் தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியைப் பெற்றதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, அந்த அணி 6 புள்ளிகள் பெற்று நிகர ரன் ரேட் 1.249-ஐ கொண்டுள்ளது. 

(1 / 10)

IPL 2024 Points Table: ஐபிஎல் 2024 இல் தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியைப் பெற்றதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, அந்த அணி 6 புள்ளிகள் பெற்று நிகர ரன் ரேட் 1.249-ஐ கொண்டுள்ளது. (PTI)

IPL 2024 Points Table: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. நைட் ரைடர்ஸ் அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. சன்ரைசர்ஸ் மற்றும் ஆர்சிபிக்கு எதிரான வெற்றிகளுடன் 4 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் 1.047 உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

(2 / 10)

IPL 2024 Points Table: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி தான் விளையாடிய 3 போட்டிகளில் 2-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. சிஎஸ்கே அணியினர் நான்கு புள்ளிகளுடன் நிகர ரன் ரேட் 0.976 பெற்றுள்ளனர்.

(3 / 10)

IPL 2024 Points Table: குஜராத் டைட்டன்ஸ் அணி நான்காவது இடத்தில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக வென்ற அந்த அணி மூன்று போட்டிகளிலும் இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் -0.738 நிகர ரன் விகிதத்துடன் தொடர்ந்தது.

(4 / 10)

IPL 2024 Points Table: ஐதராபாத் அணி தான் விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்து் 2 புள்ளிகள் மற்றும் 0.204 நிகர ரன் விகிதத்துடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. பாட் கம்மின்ஸின் அணி நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளிடம் தோல்வியடைந்து மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக வென்றது.

(5 / 10)

IPL 2024 Points Table: லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்று மற்றொன்றை இழந்து 2 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது, நிகர ரன் விகிதம் 0.025. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றது.

(6 / 10)

IPL 2024 Points Table: சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியதன் மூலம் டெல்லி கேபிடல்ஸ் இந்த சீசனின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் அந்த அணி 2 புள்ளிகளுடனும் -0.016 நிகர ரன் ரேட்டுடனும் 7-வது இடத்தில் உள்ளது.

(7 / 10)

IPL 2024 Points Table: பஞ்சாப் கிங்ஸ் சீசனின் முதல் போட்டியில் வென்றது, ஆனால் பின்னர் RCB மற்றும் டெல்லி கேபிடல்ஸிடம் தோற்றது. தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளுடன், 2 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் -0.337 உடன் 8 வது இடத்தில் உள்ளது.

(8 / 10)

IPL 2024 Points Table: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தாங்கள் விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்து ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. சிஎஸ்கே மற்றும் கேகேஆரிடம் தோற்ற அந்த அணி பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக வென்றது. 2 புள்ளிகளுடன், நிகர ரன் ரேட் -0.711 9 வது இடத்தில் உள்ளது.

(9 / 10)

IPL 2024 Points Table: மும்பை இந்தியன்ஸ் அணி ஹாட்ரிக் தோல்விகளுடன் 10வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சீசனில் ஒரு வெற்றியை கூட ருசிக்காத ஒரே அணி இதுதான். ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோல்வி அடைந்த மும்பை அணி -1.423 என்ற நிகர ரன் ரேட்டுடன் கடைசி இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளிடம் தோல்வியடைந்தது.

(10 / 10)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்