Nirmala Sitharaman: பட்ஜெட் தாக்கலின்போது கவனம் பெறும் நிர்மலா சீதாராமனின் புடவைகள்!
- Nirmala Sitharaman: பட்ஜெட் நாள் அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்து வரும் புடவைகள் பலரது கவனத்தை பெற்று வருகின்றன.
- Nirmala Sitharaman: பட்ஜெட் நாள் அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்து வரும் புடவைகள் பலரது கவனத்தை பெற்று வருகின்றன.
(1 / 8)
ஆண்டுதோறும் நடைபெறும் பட்ஜெட் தாக்கல் நிகழ்வின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்து இருக்கும் புடவைகள் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
(2 / 8)
கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலின்போது, நீல நிற துணியில் வெள்ளை நிறத்தில் சுழலும் மலர் வடிவங்கள் இடம்பெற்று இருந்த புடவையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்து இருந்தார்.
(3 / 8)
2023ஆம் ஆண்டில் கருப்பு மற்றும் தங்க நிற பார்டரில் சிவப்பு நிற புடவையை நிதியமைச்சர் அணிந்து இருந்தார்.
(HT_PRINT)(4 / 8)
2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் நிகழ்வின் போது பழுப்பு மற்றும் சிவப்பு நிற வண்ணங்கள் கொண்ட புடவையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்து இருந்தார். அதில் டெரக்கோட்டா வண்ணத் தட்டு, யானை உள்ளிட்ட உருவங்கள் இடம்பெற்று இருந்தன.
(5 / 8)
2021ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது, சிவப்பு நிற புடவையில் வெள்ளை மற்றும் மஞ்சள் நிற மாங்காய் வடிவங்களை கொண்ட புடவையை நிதியமைச்சர் அணிந்து இருந்தார். அதில் இளம் பச்சை நிற பார்டரும் இருந்தது.
(Ajay Aggarwal/ Hindustan Times)(6 / 8)
2020ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் நிகழ்வின் போது மங்களத்தை பிரதிபலிக்கும் வகையில் மஞ்சள் நிற புடவையுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் தங்க நிற பார்டர்களும் இடம்பெற்று இருந்தது.
(HT/File)(7 / 8)
2019ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது, தனிமனான தங்க நிற பார்டர்களை கொண்ட இளஞ்சிவப்பு நிற சேலையை அணிந்து இருந்தார்.
(Ajay Aggarwal/HT PHOTO)மற்ற கேலரிக்கள்