தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Figs For Hairfall Prevention: தலைமுடி உதிர்வு, இளநரை போக்க உதவும் அத்திப்பழம் பேஸ்ட்! செய்வது எப்படி தெரியுமா?

Figs for Hairfall Prevention: தலைமுடி உதிர்வு, இளநரை போக்க உதவும் அத்திப்பழம் பேஸ்ட்! செய்வது எப்படி தெரியுமா?

Jun 05, 2024 07:15 AM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 05, 2024 07:15 AM , IST

  • இளநரை, தலைமுடி உதிர்வை தடுக்கும் இயற்கையான வழிகளில் ஒன்றாக இருப்பது அத்திப்பழம். இந்த பழத்தை நாள்தோறும் சாப்பிடுவதால் மேற்கூறிய பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்

இளநரை, தலை முடி உதிர்வு பலருக்கும் பெரும் தொல்லை தரும் விஷயமாகவே உள்ளது. அதிலும் இளவயதினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவே இது அமைந்துள்ளது. நரைமுடியை போக்க டை போன்ற சாயங்கள் பூச நேரிடுகிறது. இதன் தாக்கத்தால் தலைமுடி மேலும் வெளுப்பாவதுடன், வறட்சி அடைந்து வலுவிழக்கிறது

(1 / 6)

அத்திபழத்தை வைத்து உங்கள் தலைமுடியின் நிறத்தை கருப்பாக்கலாம். அதை பேஸ்டாக தலையில் தடவுவதால் நல்ல பலனை பெறலாம்

(2 / 6)

5 முதல் 6 அத்திபழத்தை எடுத்து, அதனுடன் ஒரு டிஸ்பூன் கற்றாழை ஜெல், 2 ஸ்பூன் வெந்தயம் விதைகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்

(3 / 6)

அத்திபழத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைக்க வேண்டும். அதேபோல் வெந்தயத்தையும் நீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் மேற்கூறிய அனைத்தையும் கலந்து அரைத்து பேஸ்டாக்கி கொள்ள வேண்டும். இந்த பேஸ்டில் தயிர், கற்றாழை ஜெல் கலக்க வேண்டும்

(4 / 6)

மருதாணியை அரைத்து தலையில் தேய்ப்பது போல் இந்த கலவையை தலையில் தேய்க்க வேண்டும். தலைமுடிகளின் வேர்கள் படும் வரை தேய்க்க வேண்டும்.

(5 / 6)

சுமார் அரை மணி நேரம் அப்படியே விட்டு, வெறும் நீரில் கழுவ வேண்டும். இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்துக்கு இரண்டு முறை பயன்படுத்தினால் நரைமுடி ஏற்படுவது தடுக்கப்படுகிறது. அத்துடன் முடியும் வலுப்பெற்று, அடர்த்தி அடையும்

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்