Fibre Rich Foods : உங்கள் டயட்டில் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை ஏன் சேர்க்கவேண்டும் தெரியுமா?
- Fibre Rich Foods : உங்கள் டயட்டில் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை ஏன் சேர்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
- Fibre Rich Foods : உங்கள் டயட்டில் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை ஏன் சேர்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
(1 / 10)
உங்கள் உணவில் நார்ச்சத்து என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்க நார்ச்சத்துக்கள் என்பது மிகவும் முக்கியம். ஆரோக்கியமான உடல் எடையை பேணவும், நாள்பட்ட நோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கவும் நார்ச்சத்துக்கள் நமக்கு உதவுகிறது.
(2 / 10)
ஒரு கப் வேகவைத்த பருப்பில் 18 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. இது நார்ச்சத்து அதிகம் எடுத்துக்கொள்ள விரும்புபவர்களின் நார்ச்சத்து உட்கொள்ளும் அளவை அதிகரிக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள், கொழுப்பு அளவை குறைக்க உதவுகிறது. இதனால் இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
(3 / 10)
ஒரு கப் சமைத்த ராஜ்மாவில் 12 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. இதில் புரதம் மற்றும் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இந்த பீன்ஸை நீங்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது உங்கள் குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது, உங்களுக்கு குடல் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.
(4 / 10)
கொண்டைக்கடலைகளில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் உள்ளன. ஒரு கப் வேகவைத்த கொண்டைக்கடலையில், 12 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. கொண்டைக்கடலைகள், உடல் எடையை பராமரிப்பதிலும், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதிலும் உதவுகிறது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது.
(5 / 10)
ஒரு டேபிள் ஸ்பூன் சியா விதைகளில், 10 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. இந்த விதைகளில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. சியா விதைகள், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கலைப்போக்குகிறது.
(6 / 10)
தோலுடன் உள்ள ஒரு மீடியம் அளவு உருளைக்கிழங்கில், 3.63 கிராம்கள் நார்ச்சத்துக்கள் உள்ளது. உருளைக்கிழங்குகளில் உள்ள நார்ச்சத்துக்கள், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது.
(7 / 10)
ஓட்ஸ்கள், காலை உணவுக்கு சிறந்தவை. சமைத்த ஓட்ஸில் 5 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. இதில் பீட்டா குளுட்டன் என்ற நார்ச்சத்துக்கள் உள்ளது. இதில் கெட்ட கொழுப்புகள் குறைவான அளவுதான் உள்ளது. ஓட்ஸ், இதய ஆரோக்கியம் மற்றும் எடை மேலாண்மைக்கு பெரிதும் உதவுகிறது.
(8 / 10)
ஒரு கப் சமைத்த ப்ராக்கோலியி ல் 5 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின் சி மற்றும் கே அதிகம் உள்ளது. ப்ராக்கோலியில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள், வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மேலும், செரிமான பாதையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
(9 / 10)
ஒரு மீடியம் அளவு உள்ள ஆப்பிளில் 4.5 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. ஆப்பிளியில் உள்ள நார்ச்சத்துக்கள், உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதனால் உடல் எடையும் குறைகிறது.
மற்ற கேலரிக்கள்