Fathers Day Songs: உனக்கென்ன வேணும் சொல்லு.. தமிழ் சினிமா போற்றும் அப்பா - மகள் பாடல்கள்!
Fathers Day Songs: அப்பா, மகள் இடையே இருக்கும் அழகான உணர்ச்சி பூர்வமான பாசத்தை வெளி கொண்டு வரும் தமிழ் பாடல்கள் பட்டியலை பார்ப்போம்.
(1 / 5)
தந்தைக்கு ஒரு மகளின் சிறப்பு என்ன என்பதை தங்க மீன்கள் படத்தில் வரும் ஆனந்த யாழை பாடல் சிறப்பாக சித்தரிக்கிறது. ஸ்ரீராம் பார்த்தசாரதியின் குரலிலும், நா. முத்துக்குமாரின் வரிகளிலும் இந்தப் பாடல் ஒவ்வொரு பெற்றோரின் கண்களிலும் கண்ணீரை வர வைக்கும்.
(2 / 5)
என்னை அறிந்தால் படத்தில் உனக்கென்ன வேணும் சொல்லு என அப்பா தன் மகளை பார்த்து பாடும் பாடல் மாயாஜாலம் ஏற்படுத்தும். தாமரையின் பாடல் வரிகள் உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தும்.
(3 / 5)
இமான் இசையில் தாமரை வரிகளில் வெளியான பாடல், கண்ணான கண்ணே. சிறந்த மெலோடியாக தேர்வான இந்த பாடல் தமிழ் ரசிகர்களின் இல்லங்களில் ஒளிபரப்பானது. சித் ஸ்ரீராம் குரலில் வெளியான இந்த பாடல் பலரின் கண்களில் நீர் வர வைத்தது.
(4 / 5)
அபியும் நானும் படத்தில் வா வா என் தேவதை பாடல் பெரும் வெற்றி பெற்றது. மது பாலகிருஷ்ணன் பாடிய இப்பாடலுக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
மற்ற கேலரிக்கள்