குட் பேட் அக்லிக்கு பின் அஜித்திற்காக வலை விரித்து காத்திருக்கும் டைரக்டர்கள்.. அஜித்தின் திட்டம் என்ன?
நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் வெற்றிக்குப் பின் தமிழ் மட்டுமல்லாது பிற மொழி டைரக்டர்களும் அஜித்தை வைத்து படம் இயக்க ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிகிறது.
(1 / 8)
தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் நாயகர்களில் ஒருவரான அஜித்தின் படம் எப்போது வெளியாகும் என காத்துக் கிடக்கும் ரசிகர்களுக்கு விருந்தாய் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே விடாமுயற்சி, குட் பேட் அக்லி என 2 படம் அடுத்தடுத்து வெளியானது.
(2 / 8)
இதில் மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி படம் நீண்ட நாளுக்கு பின் அஜித்தை திரையில் பார்க்க காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. எந்த மாஸ் காட்சிகளும் இல்லாமல் போனதால் அவற்றை ஏற்றுக் கொள்ள ரசிகர்கள் தயங்கினர்.
(3 / 8)
இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் மொத்தமாக பூர்த்தி செய்ய வந்தது போல் அஜித் ரசிகர்களுக்கு திரை விருந்தாக வந்தது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி படம். இந்தப் படத்தில் அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இதனால் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எல்லாம் பறந்து வருகிறது.
(4 / 8)
இந்த சம்பவங்களை எல்லாம் பார்த்து பல இயக்குநர்கள் அஜித்தை வைத்து படம் எடுக்க மேலும் ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
(5 / 8)
குட் பேட் அக்லி படம் கொடுத்த வெற்றியை அடுத்து அஜித் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடனே இணைந்து இன்னொரு படம் நடிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. ஆனால், ஆதிக் இதுபற்றி எதுவும் இப்போதுவரை உறுதியாக கூறவில்லை.
(6 / 8)
அஜித் குமார் தற்போது கார் ரேஸ்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் நிலையில், குட் பேட் அக்லி படத்தையும் கார் ரேஸையும் முடித்தவுடன் கேஜிஎஃப் படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் பிரசாந்த் நீலின் இயக்கத்தில் அஜித் படம் நடிப்பார் என பல நாட்களாக ஒரு தகவல் வந்த வண்ணமாகவே இருக்கிறது.
(7 / 8)
இவர்களைத் தாண்டி தற்போது புஷ்பா படங்களின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சுகுமார், தான் அஜித்தை வைத்து படம் எடுக்க ஆசைப்படுவதாக சமீபத்தில் கூறி இருந்தார்.
மற்ற கேலரிக்கள்