தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Karthi Birthday Celebration: கார்த்தி பிறந்தநாளை ரத்ததானம், நற்பனிகளுடன் கொண்டாடிய ரசிகர்கள்

Karthi Birthday Celebration: கார்த்தி பிறந்தநாளை ரத்ததானம், நற்பனிகளுடன் கொண்டாடிய ரசிகர்கள்

May 25, 2024 08:10 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 25, 2024 08:10 PM , IST

  • கார்த்தியின் 47வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்களை செய்த அவரது ரசிகர்கள் ரத்த தானம் முகாம், இன்று பிறந்த குழந்தைகள் மற்றும் தாயாருக்கு பரிசு பெட்டகம் வழங்கினார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். கார்த்தியின் ரசிகர்கள் அவரது படங்களை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல்,  மாவட்டம் தோறும் பொது மக்களின் நலனை முன்வைத்து பல்வேறு விதமாந நற்செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்

(1 / 6)

மே 25ஆம் தேதியான இன்று நடிகர் கார்த்தி தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடந்த ரத்த தானம் முகாமில், கார்த்தியின் ரசிகர்கள் சுமார் 150 பேர் ரத்த தானம் செய்தார்கள்

(2 / 6)

எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் இன்று பிறந்த 100 குழந்தைகளுக்கு உடை மற்றும் தாய்மார்களுக்கு கார்த்தி ரசிகர்கள் பரிசு பெட்டகம் கொடுத்துள்ளார்கள்

(3 / 6)

இதேபோல் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் கடந்த இரண்டு வாரங்களாக அன்னதானம், நீர் மோர் வழங்குதல், போன்ற நிகழ்ச்சிகளையும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக நடத்தியுள்ளனர்

(4 / 6)

கார்த்தி தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் என்ற படத்தில் நடித்து வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது

(5 / 6)

டூப்ளிகேட் எம்ஜிஆர்கள் பின்னணியில் நிற்க, செக்டு காக்கி சட்டை பேண்ட், கூலர்ஸ் அணிந்து ஸ்டைலாக நிற்கும் கார்த்தியின் வா வாத்தியார பட லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்