Coimbatore Fire: கோவை குப்பை கிடங்கில் தீ விபத்து..டீ செலவு மட்டும் ரூ.27 லட்சம்..மற்ற செலவுகள் எவ்வளவு தெரியுமா?
- Coimbatore Vellalore fire accident: கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏப்ரல் மாதம் கொளுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க ஏற்பட்ட செலவுகள் மாநகராட்சியில் ஒப்புதலுக்கு சமர்பிக்கப்பட்டது.
- Coimbatore Vellalore fire accident: கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏப்ரல் மாதம் கொளுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க ஏற்பட்ட செலவுகள் மாநகராட்சியில் ஒப்புதலுக்கு சமர்பிக்கப்பட்டது.
(1 / 6)
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பை தரம் பிரித்து அளவுக்கு அதிகமான குப்பைகள் சேகரமாகும் நிலையில் இங்கு அவ்வப்போது தீ விபத்து ஏற்படுகிறது.இதனால் நிரந்தரமாக தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
(2 / 6)
இதற்கிடையே, வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் உரம் தயாரிக்கும் இடம் அருகே கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை கட்டுகடங்காமல் தீப்பற்றியது. அப்போது, விமானப்படையில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு, மாநகராட்சி ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
(3 / 6)
தீயணைப்பு பணியை மேற்கொள்ள தீயணைப்பு துறை, மாநகராட்சி பணியாளர்கள், அலுவலர்கள், காவல்துறை மற்றும் மருத்துவகுழு, அலுவலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
(4 / 6)
மேலும் JCP Sullage லாரி, Jetling Machine வாகனங்களுக்கு மசல் பெட்ரோல், கீரிஸ், oil ஆகியவை மாநகராட்சி மூலம் வழங்கப்பட்ட வகையில் செலவினம் மற்றும் அங்கு பணிபுரிந்த அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு உணவு, டீ, காபி மற்றும் குளிர்பானங்கள் (Food, Tea, Coffee and Cool drinks etc) ஆகியவை வழங்கப்பட்டது.
(5 / 6)
இந்நிலையில், இந்த தீயை அணைப்பதற்கான செலவு கணக்குகள் குறித்து மாநகராட்சி மன்றத்தின் பார்வைக்காக ஒப்புதல் தீர்மானமாக கொண்டுவரப்பட்டது. அதில் மொத்த செலவு ரூ.76,70,318 எனவும் டீ, காபி, உணவு உள்ளிட்டவை வாங்கியதற்கு மட்டும் ரூ.27,51,678 லட்சம் என கணக்கு காட்டப்பட்டுள்ளது.
(6 / 6)
செலவின விபரம்: 11 நாள் டீ, காபி, உணவு, குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் – ரூ. 27,51,678, டீசல் பெட்ரோல், கீரிஸ் oil – ரூ. 18,29,731, காலணிகள் (Boots) – ரூ. 52,348, முகக்கவசம் (Masks) – ரூ. 1,82,900பொக்லைன் மற்றும் லாரி வாடகை – ரூ. 23,48,661, தண்ணீர் டேங்கர் லாரி வாடகை (பேரூராட்சி மற்றும் தனியார் வாகனம்) – ரூ. 5,05,000 என கணக்கு காட்டப்பட்டுள்ளது.
மற்ற கேலரிக்கள்