OTT Malayalam Thriller Movies: OTT இல் பார்க்க வேண்டிய சிறந்த 7 மலையாள த்ரில்லர் திரைப்படங்கள்!
- OTT Malayalam Thriller Movies: ஓடிடி தளத்தில் மலையாள திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக க்ரைம் த்ரில்லர்கள் ஒன்றுக்கொன்று சளைத்தவை இல்லை என நிரூபித்து உள்ளன. ஓடிடியில் பார்க்க வேண்டிய டாப் 7 த்ரில்லர் திரைப்படங்கள் இதோ.
- OTT Malayalam Thriller Movies: ஓடிடி தளத்தில் மலையாள திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக க்ரைம் த்ரில்லர்கள் ஒன்றுக்கொன்று சளைத்தவை இல்லை என நிரூபித்து உள்ளன. ஓடிடியில் பார்க்க வேண்டிய டாப் 7 த்ரில்லர் திரைப்படங்கள் இதோ.
(1 / 8)
மலையாளத் திரையுலகில் குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்கள் வருவது வழக்கமான ஒன்றாகும். பாடல்களுக்கு மட்டும் கோடிக்கணக்கில் செலவழித்தும் ஓடாத படங்கள் மத்தியில் மலையாள படங்கள் சிறந்த கதையம்சத்துடன் திரைக்கு வந்து மக்களின் மனதை கவர்ந்து விடுகிறது. மலையாளத்தில் பல த்ரில்லர் படங்கள் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் அமேசான், சோனிலிவ் மற்றும் நெட்பிளிக்ஸ் போன்ற முன்னணி ஓடிடி தளங்களில் நீங்கள் பார்க்க வேண்டிய 7 த்ரில்லர் திரைப்படங்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
(2 / 8)
கிஷ்கிந்தா காண்டம் சமீப காலங்களில் மோலிவுட்டில் சிறந்த த்ரில்லர் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த படத்தை டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம். அபர்ணா முரளி, ஆசிப் அலி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு கிராமத்தில் நடக்கும் சில அமானுஷ்ய நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.
(3 / 8)
மலையாளத்தின் சிறந்த த்ரில்லர் படங்களில் தலவனும் ஒன்று. இந்த படத்தை கன்னடத்திலும் சோனி லிவ் ஓடிடி சேனலில் பார்க்கலாம். இதில் பிஜு மேனன், மியா ஜார்ஜ் மற்றும் ஆசிப் அலி உட்பட பலர் நடித்துள்ளனர். காவல் நிலையத்தில் நடக்கும் ஒரு விசாரனையே இதன் மையக்கரு.
(4 / 8)
2022 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஜன கண மன திரைப்படம் நெட்பிளிக்ஸில் ஓடிடி தளத்தில் உள்ளது. சீட் எட்ஜ் த்ரில்லர் பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் நடக்கும் ஒரு கொலையின் அதிர்ச்சி தரும் பின்னணி தான் சஸ்பென்ஸ் ஆகும்.
(5 / 8)
கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான மலையாள த்ரில்லர் திரைப்படமான Forensic திரைப்படம் நெட்பிளிக்ஸில் கிடைக்கிறது. படத்தின் நாயகன் டொவினோ தாமஸ். இது முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆக உள்ளது.
(6 / 8)
பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த கோல்ட் கேஸும் ஒரு சீட் எட்ஜ் த்ரில்லர் படமாகும். இப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம்.
(7 / 8)
டொவினோ தாமஸ் நடித்த மர்டர் மிஸ்டரி த்ரில்லர் படமான அன்வெஷிப்பின் கண்டதும். படத்தை நெட்ஃபிளிக்ஸில் பார்க்கலாம். இடைநீக்கத்தில் இருந்து வந்த காவல் அதிகாரி விசாரிக்கும் வழக்கை மையக்கருவாக கொண்டுள்ளது இப்படம்.
மற்ற கேலரிக்கள்